பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு விவரம் 128 வகுத்தவர்கள், அதற்குப் போதுமான பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். சமத்துவம் என்று எவ்வளவோ பேசலாம். அதை நடைமுறையில் கைக்கொள்வது மிகவும் கடினமாகும். பார்ப்பனரல்லாதாரே முன்னேற்ற சக்தியற்றவர்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந் தரும், சென்னையிலுள்ள பெரும்பாலான ஆலை உரிமையாளரும், சென்னை அரசாங்க மந்திரிகள் 12 பேரில் 11 பேரும் பார்ப்பனரல்லாதார். எனவே -பார்ப்பனரல்லாதார் எல்லாரும் 'சக்தியற்ற வகுப்பினர்' என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவு அரசியலின் 15 வது கட்டளைக்கு முரணானது. அர சாங்கம், குடிகளுக்குள் வேற்றுமை பாராட்டக் கூடாதென்பது தான், அந்தக் கட்டளையின் அடிப்படை நோக்கமாகும். . அரசியலின் 15-வது கட்டளை மறுக்க முடியா தது. கைக்கொண்டே ஆகவேண்டியது. இதிலும் இந்த வகுப்புவாத உத்தரவு குறுக்கிடுகிறது. சாதி வாரியாக மக்களைப் பிரிக்கிறது. எனவே. இந்த வகுப்புவாத உத்தரவு அரசியலின் அடிப்படைக் கொள்கையையே தகர்ப்பதாக இருக்கிறது. 16-வது கட்டளைக்கே முரணாக இருக்கிறது தலைமை நீதிபதியின் தீர்ப்பை நான் ஒப்புக் கொள்கிறேன். அடுத்துத் தீர்ப்பளித்த நீதிபதி. திரு. சோமசுந்தரம் அவர் கள் தீர்ப்பின் சுருக்கம் இதுவாகும்: "அரசாங்கத்தின் சார்பில் வாதிட்ட அட்வ கேட் ஜெனரல் 15, 29-ஆகிய கட்டளைகளிலுள்ள 'ஒன்லி' (only) என்ற சொல்லை மிகவும் வற்புறுத்