124 வகுப்புரிமைப் போராட்டம் தினார். அது கவனிக்கப்பட வேண்டியதும், நியாய மானதுமாகும் அதாவது குறிப்பிட்ட, (மதம் இனம், சாதி, மொழி) சிலவற்றின் காரணமாக மட்டுமே (குடிகளுக்குள்) வேற்றுமை காட்டக்கூடா தென்று அரசியல் சட்டத்தின் கட்டளை தெரிவிப் பதாக அவர் கூறுகிறார். அரசியல் சட்டத்தை வகுத்தவர்களும் அதன் அவசியத்தைத் தெரிந்தே வகுத்துள்ளனர். மக்களுக்குச் சமத்துவமளிப்பது எப்படி என்பதை ஒரு ஆட்சியை நடத்துபவர்கள் தான் தீர்மானிக்க முடியும். அரசியல் திட்டத்தின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசுகையில், (அரசாங்க நடைமுறை) கொள்கைக் கட்டளைகளை முற்றிலும் புறக்ணித்துவிட வேண்டுமென்பதில்லை. 46-வது கட்டளைக்குப் பின்னர்தான் 29-வது கட்டளை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. 46-வது கட்டளைக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டியது அவசியந்தான். தலைமை நீதிபதியும், சகோதர நீதிபதியும் கூறிய தீர்ப்புக்களைக் கேட்டேன். அவைகளைக் கேட்ட பிறகு, அவர்களின் தீர்ப்பை நான் ஒப்புக் கொள்கிறேன்." இந்தத் தீர்ப்புக்கள் வழங்கப் பட்டவுடன், இதில் பல சட்டப் பிரச்னைகள் ஏற்படுவதால், சர்வநீதி மன்றத்துக்கு (Supreme Court) எதிர் விண்ணப்பம் (அப்பீல்) செய்ய அனுமதி வேண்டு மென்று அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்ட படி, தலைமை நீதிபதி அனுமதியளித்தார். திராவிடத்தின் துயர் இந்தத் தீர்ப்பினைக் கேட்டுத்தான், வெந்த புண்ணிலே வேலெனத் துடித்துத் துவண்டது திராவிடம். நாம், துவக்கத்தில் விளக்கியுள்ள
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
