பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு விவரம் 185 நிலைமைக்குக் காரணமாக விளங்கியது இத்தீர்ப் புத்தான். இந்தத் தீர்ப்பு -சட்டத்தின்படி அமைய வில்லை என்றோ, நீதிபதிகள் தவறு இழைத்துவிட் டார்கள் என்றே கருதியதால் அல்ல, நாட்டு மக்க ளும், மாணவ இளஞ்சிங்கங்களும் பெரியதொரு போராட்டத்தைத் தொடங்கியது. ஆனால் நாட்டு மக்களின் உரிமை, பறிக்கப்படுகிறது அரசியல் சட்டப்படி கிடைத்த இத்தீர்ப்பினால் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவையும் எண்ணிப் பார்த்த தால் தான், "கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்" என்ற பாராட்டுக்குரியவராயினர். உண்மையிலேயே ஒரு தீர்ப்பு சட்டத்தின் படி சரியே என்று கொண்டாலும், அந்தத் தீர்ப்பு, சமூக நீதிக்கு, மக்கள் வாழ்வுககுக் கேடு பயக்கு மானால், அறிவும் எழுச்சியும் கொண்ட மக்கள், அந்தத் தீர்ப்பை வழங்கக் காரணமான சட்டத்தை மாற்றியமைத்துத் தங்கள் உரிமையைக் காத்துக் கொள்ளக் கிளர்ந்தெழுவது இயல்பேயாகும். பொதுமக்கள் சட்டத்தின் நுணுக்கத்தையோ அதன் இடைவெளிகளையோ உயர்சிகரங்களையோ உணர முடியாது, ஆனால் சட்டத்தினால சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர்களால் உணர முடியும். எனவே விளைவை எண்ணித்தான், மக்கள் எந்தச் சட்டத்தையும் ஏற்கவே அல்லது மறுப்பதன் மூலம் மாற்றக் கேட்களோ முன்வரக கூடும். பொது அம் முறைப்படியே-தீர்ப்பினால் ஏற்பட்ட பரி தாபகரமான நிலைமையை மாற்றியமைக்கத்தக்க யெல்லாம் எடுத்துக்கொள்ள நடவடிக்கைகளை வேண்டுமெனத் தமிழகமே திரண்டெழுந்து அர சாங்கத்தை வற்புறுத்திக் கேட்கலாயிற்று.