126 வகுப்புரிமைப் போராட்டம் மாணவர் கூட்டமே, தமிழர் பெரும்படையின் முன்னணியாகத் திகழ்ந்தது. சென்னை,பச்சையப் பன் கல்லூரிக்காளைகள் ஊதிய அபாயச் சங்கொலி கேட்டு, குமரிமுனை வரையிலு முள்ள கல்லூரிகளி லும், உயர் நிலைப் பள்ளிகளிலும் எதிரொலி கிளம் பிற்று. பள்ளிமறுப்பு, ஊர்வலம், பொதுக் கூட் டம் முதலியன நடத்திச் செய்வதறியாது திகைத் திருந்த அமைச்சர்களுக்கே கூட கடமையுணர்ச்சி யும் கருத்திலே தெளிவும் தோன்றச் செய்தனர். வகுப்புரிமைச் சட்டத்தின் தந்தை, அறிஞர் எஸ். முத்தையா அவர்களும், திராவிட முன்னேற் றக்கழகப் பொதுச் செயலாளர்.அறிஞர் அண்ணாத் துரை அவர்களும், திராவிடக் கழகத் தலைவர் பெரி யார் ராமசாமி அவர்களும், மற்றும் பல திரா விடர் இயக்கத் தலைவர்களும். தீர்ப்பில் கூறப்பட் டுள்ள விளக்கப்படி இந்தியக் குடியரசின் புது அர சியல் சட்டம், தென்னாட்டுப் பெருங்குடி மக்களுக்கு இழைத்துள்ள கொடுமையையும், வகுப்புரிமைச் சட்டத்தின் அவசியத்தையும் விளக்கி வெளியிட்ட அறிக்கைகளும், நிகழ்த்திய விரிவுரைகளுமே, மக் களின் விழிப்புக்கும், உரிமை எழுச்சிக்கும் காரண மாயின. நகரங்களில் மட்டுமன்றிப் பட்டி தொட்டிகளி லும் நடைபெற்ற மாபெரும் ஊர்வலங்களும், கடை யடைப்புக்களும் மக்களின் மனக் கொதிப்பை உல கிற்கு உணர்த்தலாயின. 'கம்யூனல் ஜி.ஓ'வைக் கல்வித் துறையிலும் கைவிடக் கூடாது. தீர்ப்புக்குறித்து சுப்ரீம் கோர்ட்க்கு அப்பீல் செய்யவேண்டும். அப்பீல் பயனளிக்காவிடில், 'கம்யூனல்-ஜி ஓ'விற்குப் அரசியல் சட்டப் பாதகமான பிரிவைத் திருத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ப
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
