தீர்ப்பும் அரசியல் சட்டமும் 129 ஏடு ஆதாரங்கள் வெளியிடலாயின. பார்ப்பன கள் அத்தனையும் தமது "இருட்டடைப்பு" வேலை யைக் கவனமாகச் செய்தன. உண்மையில், பார்ப்பனர்கள் எல்லோரும், கட்சி வேறுபாடின்றி, எந்நிலையினரானாலும், கம்யூனல் ஜி.ஒ.வை ஒழித்துவிடுவதில் எப்படி ஒன்றுபட்ட மனமுடையவர்களாக இருக்கின்றார் களோ, அப்படியே திராவிடப் பெருங்குடி மக்க ளான பிற்பட்ட வகுப்பினர் எல்லோருமே, தம்மைப் பிரித்துவைத்துப் பேதப்படுத்தும், சாதி, மதம், குலம், கட்சி மாறுபாடு ஆகிய எந்த வேற்றுமையையும் பாராட்டாது, ஒன்றுபட்ட உள்ளத்தோடு, உரிமைப் போரில் தோளொடு தோளிணைத்து நின்று, வகுப்புரிமையை நிலை நாட்டச் செய்ய முன் வந்தனர். தமிழர்களி டையேஒரு எழுச்சி, திராவிடத்திலே ஒரு புதுமை, உரிமை வேட்கை கொண்டவர்களின் ஒரு பெரும் அணிவகுப்பு அமைந்தது அந்தத் தீர்ப்பினால். ஆம்! 'அந்தத் தீர்ப்பைப்' பெற்றுத் தரக் காரணமாக விளங்கிய பூசுரர் குலத்தவருக்கும், அதன்M ஆதிகாரணமாகத் திகழ்ந்த ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், எழுச்சி யுற்ற தமிழகம், நன்றி செலுத்தத்தான் வேண்டும். தீர்ப்பும், அரசியல் சட்டமும் உயர்நீதிமன்றம் தந்த அந்தத் தீர்ப்பைக் கூர்ந்து நோக்கினாலோ, நீதிபதிகள் தனித்தனியே வழங்கிய தீர்ப்புரைகளிலே, முடிக்கப்படும் வாக்கி யங்கள் ஒன்றேயானாலும், தனித்தனி நீரோட்டங் 9
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/135
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
