180 வகுப்புரிமைப் போராட்டம் கள் - வர்ண வேறுபாடுகள் காணப்படுவதை உண ரலாம். 'கல்வித்துறையைப் பொருத்தவரையில் வகுப்புரிமைச் சட்டம், புதிய அரசியல் சட்டத்தின் படி செல்லாது'- என்ற தீர்ப்பை நீதிபதிகள் மூவரும் வழங்கியிருக்கிறார்கள். அவரவர் தீர்ப்பி லும் உள்ள வாசக வேறுபாடுகள், அவரவர் உள் ளக் கருத்தினைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன. தலைமை நீதிபதி, புது இந்திய அரசியல் சட் டம் என்ன சொல்லுகிறது என்று மட்டுமே பேசு கிறார். நீதிபதி விசுவநாதசாத்திரி, கம்யூனல் ஜி ஒ.எப்படியெல்லாம் சட்டத்திற்கு முரணாகும் என்று விளக்குகின்றார். நீதிபதி சோமசுந்தரம் அவர்களோ, கம்யூனல் ஜி. ஒ. அரசியல் சட்டத் திற்கு முரணானதல்ல என்று சொல்லவும் இ முண்டு எனக் குறிப்பிட்டுவிட்டு சகோதர நீதிபதி களின் முடிவைத் தாமும் ஏற்பதாகத் தெரிவித் துள்ளார். இட மேலும், அரசியல் சட்டத்திற்குத் தரப்படும் விளக்கத்தில் மாறுபாட்டுக்கு இடமிருப்பதாலேயே அட்வகேட் ஜெனரல் கேட்டுக்கொண்டபடி, டில்லி தலைமை நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்யவும் அனுமதியளிக்கப்பட்டது. தலைமை நீதிமன் றத்தின் கருத்துதான், அரசியல் சட்டத்திற்கு முடிவான விளக்கமாகும். இந்திய அரசியல் சட்டத்தின் மூன்றாவது பாகத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை களை (Fundamental Rights) விளக்கும் கட்டளை களே நீதிபதிகளின் கருத்துக்கள் மாறுபடுவதற் குக் காரணமாகும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/136
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
