தீர்ப்பும் அரசியல் சட்டமும் 181 இந்திய அரசியல் சட்டம் கட்டளை 15 பிரிவு 1 (60) " இந்தியக்குடி எவரையும், அவரது மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற் றிற்காகவோ, அவற்றுள் எந்த ஒன்றிற்காகவோ மட்டும் அரசாங்கம் வேற்றுமையாக நடத்தக் கூடாது" என்றும், கட்டளை 29, பிரிவு 2-ல், அர சாங்கத்தினாலோ, அதன் பொருளுதவியாலோ நடைபெறும் எந்தக் கல்வி நிலையத்திலும், குடி மக்கள் எவரும், அவரது மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றிற்காகவோ, அவற்றுள் எந்த ஒன்றிற்காகவோ மட்டும் அநுமதி மறுக்கப்படக் கூடாது' என்றும் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ள இந்தக் கட்டளைகளால் உணர் தப்படும் குறிக்கோள் குறித்துதான் மாறுபாடுகள் தோன்றுகின்றன. அடிப்படை உரிமைகள் . இந்தக் கட்டளைகளைத் தாங்கி நிற்கும் 'அடிப் படை உரிமைகள்' என்பவை குறித்தே வேறு பட்ட கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. "'உரிமை' (Right) என்பது விடுதலை, சலுகை (Liberty & Previlege) என்பவை போன்று, எந் தப் பொறுப்பும் இல்லாதது அல்ல" என்றும், 'கடமை' என்பது இன்றி சட்டப்படியான 'உரிமை' என்பதும் இல்லை" என்றும், "அடிப்படை உரிமைகள் என்பவை சில கடமைகளையும் கொண்டவையே" என்றும், "புது அரசியல் சட்டங்களில் அமைந் துள்ள அடிப்படை உரிமைகள், அப்படியே முழு வடிவில் அமைந்த சட்டங்களாகிவிட மாட்டா” என்றும், அரசியல் சட்டப் பேரறிஞர் சிலர், கருத் துரை வழங்கியுள்ளனர். அவற்றை நோக்கினால், 'அடிப்படை உரிமைகளை அப்படியே சொல்லுக் குச் சொல் பொருள்கொண்டு செலுத்தக் கூடுமா
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/137
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
