பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வகுப்புரிமைப் போராட்டம் என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. சட்டத் தின்படி வழங்கும் 'உரிமை' என்றசொல், பொது வாகக் கருதப்படும் பொருளிலிருந்து சிறிது வேறான பொருளையே குறிப்பிடுகிறது என்பதும் உண்மையாகும். அரசியல் சட்டத்தில், 'அடிப்படை உரிமை களைக்' கூறும் 3-வது பகுதியும், 'அரசாங்க நிர்வா கத் திட்டத்தைக் கொண்டு செலுத்தும் கொள்கை களைக் கூறும் 4-வது பகுதியும் ஒன்றாகச் சேர்த்தே (வேறு படுத்திப் பிரிக்காமல், தொடர்ந்தே) படிக் கப்பட வேண்டும் என்பது பல சட்ட வல்லுனர்க ளின் கருத்தாகும். அப்படிச் சேர்த்துப் படிக்கப் பட்டால்தான், அடிப்படை உரிமைகள் என்ற சொற்றொடரின் முழுப் பொருளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படி, 3-வது 4-வது பகுதிகள் தொடர்ந்து படிக்கப்பட்டால்தான், எந்த அரசியல் சட்டத்தி லும் அமைய வேண்டிய ஒழுங்கிற்கேற்ப ஒரு கட் டளை - மற்றொரு கட்டளையால் மறுக்கப்படுவதற்கு இடமின்றிச் சட்டத்தை விளங்கிக் கொள்ள முடியும். அரசியல் சட்டத்தின் கட்டளை 46-ல் “குடி மக்களில் வலிவற்ற வகுப்பினரையும், சிறப் பாகத் தாழ்த்தப்பட்ட சாதியினரையும், தாழ்த்தப்பட்ட கூட்டத்தாரையும், பொருளா தாரக் கல்வித் துறைகளில் முன்னேற்றத்திற் குக் கொண்டுவர அரசாங்கம் தனிமுயற்சி எடுத்துக்கொள்வதோடு, எல்லா விதச் சுரண் டல்களிலிருந்தும், சமூகக் கொடுமைகளினின் றும் அவர்களைக் காப்பாற்ற முற்பட வேண் டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.