தீர்ப்பும் அரசியல் சட்டமும் 133 இந்தக் கட்டளை 46-ம், கட்டளை 29-ல் பிரிவு 2-ம் ன்றாகச் சேர்த்துப் படிக்கப்பட்டால், கருத்து தளிவாக விளங்கக் கூடும். அவ்வாறு பொருள் கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்காகக் கல்வி நிலையங்களில் உள்ள இடங்களை வகுப்புக்களுக்கிடையே பிரித் தளிப்பது தவறல்ல என்று சொல்லப்பட்டால் தான், அடிப்படை உரிமைகள் கட்டளை 16 பிரிவு 1 - கூறுகின் றபடி "அரசாங்கத்தின் கீழே உள்ள எந்த உத்தியோக நியமனத்திலும் குடிமக்கள் எல் லோருக்கும் சமசந்தர்ப்பம் (ஒத்த வாய்ப்பு) வழங் கப்படும்" என்பது நடைமுறை உண்மையாகும். அரசியல் சட்டம் கட்டளை 15 பிரிவு 1, எந்த உரிமையையும் தெளிவாகக் குறிக்கவில்லை என்ப தோடு, எந்த ஒரு கட்டளையையும் மறுக்கவுமில்லை. அது கூறும் உரிமைகளை உணர அதனோடு தொடர் புள்ள மற்றக் கட்டளைகளையே நோக்கவேண்டி யிருக்கிறது. என கட்டளை 15-பிரிவு 2-என்பது, '"(அ) கடைகள், பொது. உணவுச்சாலைகள், சிற்றுண்டி விடுதிகள், பொதுக்களியாட்டம் நிகழும் இடங்கள் ஆகியவற் றிற்குச் செல்லவும் (ஆ) பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டனவும், அரசாங்கத்தாலோ அதன் பொருளுதவியாலோ காக்கப்படுவனவுமான, கிண றுகள், குளங்கள், குளிக்குமிடங்கள், சாலைகள், பொதுமக்கள் தங்குமிடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் எந்த ஒரு குடிமகனும், மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவை காரண மாகவோ, அவற்றுள் எதன் காரணமாகவோ மட் டும், எந்த விதமான தகுதியின்மைக்கோ, தண்ட னைக்கோ, தடைக்கோ, கட்டுப்பாடுகட்கோ உட் படுத்தப் படக்கூடாது" என்று கூறுகிறது.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/139
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
