பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வகுப்புரிமைப் போராட்டம் கட்டளை 16 - பிரிவு 2-என்பதோ, அரசாங்கத் தின் கீழுள்ள எந்த உத்தியோகம் அல்லது வேலை யானாலும், அதைப் பொருத்து, எந்தக் குடிமக னும், மதம், இனம், சாதி,பால், குடிவழி பிறப் பிடம் ஆகியவற்றிற்காகவோ, அவற்றுள் எந்த ஒன்றிற்காகவோ மட்டும் தகுதியில்லை என்றோ வேற்றுமைப்படுத்தியோ கொள்ளப்படக்கூடாது" என்று கூறுகின்றது. கட்டளை 15-பிரிவு 1-என்பது உரிமையை விரி வான கருத்தில் விளக்கி நிற்கிறது என்பது உண்மையானால், அதற்குள் அடங்கிவிடக்கூடிய அதே 'உரிமை'யின் ஒரு பகுதியைமட்டும் விளக்கி கட்டளை 16- பிரிவு 2, நிறைவேற்றப்பட்டுள்ளது ஏன்? சட்டம், மறுமுறையும் கூறப்படுவதில்லை என் பது ஒப்புக்கொள்ளப்பட்டால், கட்டளை 15-பிரிவு 1 என்பது கட்டளை 16 - பிரிவு 2- என்பதில் கூறப் பட்டுள்ளவற்றை உள்ளடக்கி நிற்கவில்லை என்று தானே கொள்ளவேண்டும். அதன்படி, கட்டளை 15-பிரிவு 1-ல், கட்டளை 16 - அடங்கி நிற்கவில்லை என்பது உண்மையானால், மற்றும் பலவற்றை அே தே கட்டளை அடக்கி நிற்பதாகக் வது எப்படி நியாயமாகும்? கூறு. மேலும், கட்டளை 16 - பிரிவு 2-ஐக் கூர்ந்து நோக்கினால், அது அரசாங்கத்தின் கீழுள்ள உத்தியோகத்தைக் குறித்தே வரையறுத்துக் கூறியுள்ளதென்பதும், அதுபோன்றே, 'அவசிய மென்று கருதப்பட்டிருந்தால் அரசியல் சட்டத் தில் வேறு எதையும் வரையறுத்துக் கூறியிருக்க லாம் என்பதும் தோன்றாமற் போகாது. இந்தக் கட்டளை 16-பிரிவு 3-க்கும் விதிவிலக்காகக் கட்டளை 16 - பிரிவு 4 நிறைவேற்றப்பட்டுள்ளது.