பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பும் அரசியல் சட்டமும் 135 "அரசாங்கப் பணிகளில், நியாயமான அளவு இடம் பெறவில்லை என்று அரசாங்கத்தால் கரு தப்படும் எந்தப் பின்னணி வகுப்புக் குடிகளுக் கும் அரசாங்கப் பதவிகளையும், வேலைகளையும், அரசாங்கம் ஒதுக்கி (Reserve) வைப்பதற்கான ஏற்பாடு செய்வதை இக் கட்டளையிலுள்ள எதுவும் தடை செய்யாது' - என்பதே அது. அதன்படி கட்டளை 15- பிரிவு 1-ம், கட்டளை 16-பிரிவு 2-ம் கூறும் உரிமைகள், அந்த அளவில் மாற்றப்படு கின்றன என்பதுமட்டுமன்றி, அப்படி மறுக்கும் கட்டளை 16-பிரிவு 4-ம் அடிப்படை உரிமைகளி லேயே கூறப்பட்டுள்ளது கவனித்தற்குரியது. இந்நிலையில் 'கம்யூனல் ஜி. ஒ.' அதன் தத்துவத்தால், அடிப் படை உரிமைகளோடு எப்படி மாறுபடக்கூடும்? என்ற கேள்வி யும் எழுகின்றது. இனி கட்டளை 29-பிரிவு 2-ஐ நோக்கினாலோ, சிறுபான்மையினரின் நலன்களைக் காத்துநிற்கும் கட்டளை 29-பிரிவு 1 - க்கும், சிறுபான்மையினர் தம் விருப்பம்போல் கல்வி நிலையங்களை நிறுவவும் நடத்தவும் செய்யலாம் என்று கூறும் கட்டளை 30 பிரிவு 1 -க்கும் இடையில், ஒருவாறு தொடர்பும் பொருத்தமும் ஆற்றுக் காணப்படுகின்றது என்ப தோடு, முன்னும்பின்னும் உள்ள கட்டளைகள்முழுப் பயன் தருவதற்கும் தடையாகுமோ என்ற ஐயத்தை எழுப்புகின்றது. மேலும் அக்கட்டளை எந்த ஒரு மதம், இனம், சாதி, மொழி ஆகிய எதைச் சேர்ந்தவர்களும் (சிறுபான்மையினரும்) கல்வி நிலையங்களில் அடியோடு தடுக்கப்பட்டுவிடக் கூடாது (Total Exclusion of minorities) என்ற கருத்தையே கொண்டுள்ள தாகவும் பலரால் கரு தப் படுகின்றது. மற்றும், கட்டளை 15-பிரிவு 1. கட்டளை 29, பிரிவு 2- ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள 'ஒன்லி'