பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வகுப்புரிமைப் போராட்டம் (ONLY) என்ற சொல்லிற்கு இடம் நோக்கிக் கொள்ளவேண்டிய பொருளிலும் மாறுபாடு எழு கின்றது. ஆனாலும், மிகவும் பொருத்தமாகத் தோன்றுகின்றபடி "குடிமக்களில் எவரும் அவரது மதம், இனம், சாதி மொழி ஆகியவற்றுள் எதற் காகவோ, அல்லது எல்லாவற்றுக்காகவோ மட்டும் வேறுபடுத்தப்படக் கூடாது என்று கொள்ளப் படும் பொருள் சரியானால், 'கம்யூனல், ஜி. ஓ.' வும் குற்றமுடையதாகாது. கம்யூனல் ஜி.ஓ.'வின்படி எந்த மாணவரும் அவரது மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றிற் காக மட்டும் வேற்றுமைப் படுத்தப்படவில்லை. அந் தந்த வகுப்பும் கல்வித்துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் அல்லது பிற்போக்கு ஆகிய சூழ் நிலையில் அவரவரும் பெறக்கூடிய தகுதிகள் வேறுபடுகின்ற காரணத்தால், விண்ணப்பித்துக் கொள்ளும் மாணவர்கள் எல்லோரையும் சேர்த் துக் கொள்ள கல்லூரிகளில் இடமில்லாத நிலையில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிகத் தகுதி பெற்றவர் கள் (தகுதி வரிசையில் முன்நிற்பவர்கள்) சேர்க்கப் படுகிறார்கள். ஒருவரின் மதம் சாதி மட்டுமன்றி அந்த வகுப்பின் முன்னேற்ற நிலையும், அதில் அவர் அடைந்துள்ள தகுதியின் வரிசையுமே, அவரைச் சேர்க்கவும் மறுக்கவும் காரணமாகிறது. மற்றும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும், ஒரே தகுதியைக் கைக்கொண்டால் உயர் தகுதிகளைப் பெறமுடியா த ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டவர் போன்ற சில வகுப்பார்,இடமே பெறாது அடியோடு புறக்கணிக் கப் பட்டுவிடவும் நேரலாம். ஒவ்வொரு வகுப்பி லிருந்தும் சிலரையேனும் சேர்த்துக்கொள்ளவும் மதம் சாதி முதலிய காரணங்களினாலேயே ஏற்பட் டுள்ள நிலைமைகளின் உண்மைக்கு மாருக எவரும் வேற்று மைப்படுத்தப் படாம தடுக்கவும். நிலைத்துப்