பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பும் அரசியல் சட்டமும் 187 போன பழமையின் பரிசான வேற்றுமைகளைக் குறைக்கவும் காரணமாகும் 'கம்யூனல் ஜி. ஓ.' குடி மக்களை வேறுபடுத்துவதாவது எங்ஙனம் ? அப் படி வேறுபடுத்தினும், அது மதம், இனம், சாதி; மொழி காரணங்களால் அல்ல என்பதும் அந்தந்த வகுப்பின் கல்வித் தகுதியில் காணப்படும் வேறுபாடு கள் காரணமாகவே என்பதும் கருதத் தக்க தாகும். மற்றும், குடிமக்கள் எல்லோரையும், அவரவர் தம் நிலை வேறுபாடுகளைக் கொள்ளாது ஒன்றாகவே கருத வேண்டும் என்பதே கட்டளைகள் 15-(1), 29-, (2),16-(2) ஆகியவற்றின் நோக்கம் எனில், கட்டளை கள் 16-(4), 46, ஆகியவை முரண்பட்டே நிற்கின் றன. எனவே கட்டளைகள் 16-(4), 46, ஆகியவற்றின் கருத்துக்கள் நிறைவேறும் வகையில் அடிப் படை உரிமைகள் அமைந்துள்ளன எனில் அதற் கேற்பவே கட்டளைகள் 15 (1), 29 (2) ஆகியவற் றிற்கு விளக்கம் செய்துகொள்ள வேண்டும். மற்றும் உத்தியோகத்தில், பிற்படுத்தப்பட்ட வர்களுக்கென இடம் ஒதுக்கலாம் என்பதை ஒப் புக்கொண்டுள்ள அதே அரசியல், சட்டம் கல்வித் துறையில் இடம் ஒதுக்குவதற்கு மட்டும் இடமளிக் காமலிருப்பது எப்படி நியாயமாகும் என்பதும் சிந்திக்கற்பாலது. கம்யூனல் ஜி. ஓ. வேறுபடுத்துகிறதா? கம்யூனல் ஜி. ஓ . மதம், சாதி, முதலியவை காரணமாகக் குடிகளை வேறுபடுத்துகிறதா ? என் பது குறித்தும், சென்னை உயர்நீதி மன்றம் அளித் துள்ள தீர்ப்பினால் நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய தொல்லைகளைக் குறித்தும், அறிஞர் எஸ். முத்