தார் தீர்ப்பும் அரசியல் சட்டமும் 139 முதலாவது இடத்திற்கு ஒரு பார்ப்பன ரல்லா தெரிந்தெடுக்கப்படவேண்டும். இவ்வாறு பிரித்து எடுப்பது பார்ப்பன ரல்லா தாருக்குச் சாதகமானது. மற்றவர்களுக்கு, அதாவது ஆதித் திராவிடர், கிருத்தவர், பின்னணி வகுப்பார் ஆகியவர்களுக்குப் பாதகமானது. துபோன்றே, இரண்டாவது இடத்திற்கு ஒரு ஆதித்திராவிட வகுப்பாரைப் பிரித்து எடுப்ப அவ் வகுப்பாருக்குச் சாதகமானதும், மற்ற வகுப்பார்களுக்குப் பாதகமானதுமாகும். தானது இதுபோலவே ஐந்தாவது இடத்திற்கு ஒரு பார்ப்பனரைப் பிரித்து எடுப்பதானது, பார்ப் பன வகுப்பாருக்குச் சாதகமானதும்,மற்ற வகுப் பாருக்குப் பாதகமானதுமாகும். இவ்விதமாகவே, ஒவ்வொரு சுற்று வரும் போதும் ஒவ்வொரு இடத்தையும் நிரப்புகையில், ஒரு வகுப்பாருக்குச் சாதகமும் மற்ற வகுப்பார்க ளுக்குப் பாதகமுமாகவே இருக்கும். மொத்தத் தில் பார்க்கப்போனால், இம்முறையானது எல்லா வகுப்பார்களுக்கும், சாதக பாதகம் இரண்டும் உடையதாக இருப்பது புலப்படும். ஆகவே இம் முறை, அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி பிரித்துவைத்து வேற்றுமை காட்டுகின்றதென்று கொள்ளப்படலாமா? நிர்வாகத் துறையில் மேலும், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பின் படி நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய தொல்லைகளும் பல. 200- மாணவர்களுக்கே இடமுள்ள ஒரு கல்வி நிலையத்தில் சேருவதற்கு 1000-விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. தகுதியாளர்களை வடிகட்டக் ம்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/145
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
