140 வகுப்புரிமைப் போராட்டம் கூடிய பல பன்னாடைகளால் வடிகட்டிய பின்பும் 500 பேர் தகுதி பெறுகின்றனர். இவர்கள் யாவ ரையும் சேர்த்துக்கொள்ள இயலாது. 300 பேரைக் இந்நிலையில், மாணவர்க ளை ச் சேர்க்கும் பொறுப்பாளர் எந்த முறையைக் கையாள்வது? அவரவரின் விருப்பு, வெறுப்புக்கு விடப்படுவதா? கழித்தாகவேண்டும். மாணவர்களைச் சேர்க்கும் அதிகாரி பார்ப்பன ரல்லாதாரானால் அவ்வகுப்பாரையும், பார்ப்பன ரானால் அவ்வகுப்பாரையும், வேறு வகுப்பாரா ல் அவரவர் வகுப்பினரையுமே சேர்த்துக் கொள்வர். இதுபற்றி அரசாங்கம் அவரைக் கேள்வி கேட்டால், அரசியல் சட்டத்தின் அடிப் உரிமைகளின்படியே தகுதியுள்ள பேரைச் சேர்த்திருக்கிறேன் என்று பதில் கூறக் கூடும். அரசாங்கமும் சாதி, சமூகம் என்ற கார ணங்களைக் கொண்டு ஏதும் செய்ய முடியாது. படை 200- மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை யைக் கையாளலாம். ஒருவர் சொல்லலாம், அபாஸ் அலி, ஆப்ரகாம், அச்சுதன், ஆனந்த ராமன், அண்ணாமலை போன்ற அகரவரிசையில், பெயர்களைப் பொறுக்கி எடுக்கிறேன் என்று. மற்றொருவர், தேதிவாரியாக விண்ணப்பங்களைப் பொறுக்கி எடுக்கிறேன் என்று கூறலாம். பெண் களும், ஆண்களும் சேர்ந்து படிக்கக்கூடாது என்ற கருத்துடையவர்-பெண்களைச் சேர்க்க. மறுக்கலாம். இப்படி மனித அறிவு எத்தனையோ 'குயுத்திகளில்' செல்லலாம். இந்த விபரீதச் செயல் களைத் தடுக்கவேண்டாமா? தடுப்பதென்றால், சர்க்கார் எந்த முறையைப் பின்பற்றுவது? உதாரணமாக, யூனியன் சர்க்காருக்கு 500 இராணுவ அதிகாரிகள் தேவை என்று வைத்துக்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
