பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பும் அரசியல் சட்டமும் 141 கொள்ளுங்கள். டேராடன்னில் உள்ள இராணு வக் கல்லூரியைப்போல் ஒரு பயிற்சிக் கல்லூரி ஏற்படுத்துகிறார்கள் என்றும், இதில் ராஜபுத்திரர் கள், சீக்கியர்கள் கூர்க்கர்கள்தான் சேர்க்கப்பட லாம் என்றும் முறை வகுத்து அவர்களைமட்டும் சேர்க்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். இது, அரசியல் சட்டத்தின் 15-வது கட்டளை முதல் பிரிவின்படியும், 29-வது கட்டளை 2-வது பிரிவின் படியும் குற்றமானதாகும் என்று கூறப்படலாமா? கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் படும் தொல்லையை நீக்கவும், ஒரே இடத்தில் வந்து குழு முவதைத் தடுப்பதற்கும், அந்தந்த மாவட்டங்களில் கல்லூரிகளை ஏற்படுத்தி அந்தந்தப் பகுதியிலுள்ள வர்களை மட்டும் சேர்க்க வேண்டும் என்று அரசாங் கம் உத்திரவு பிறப்பித்தால், இவ்வாறு செய்வது, இந்த இடத்தில் பிறந்தான் என்று பிரித்துவைப் பது, அரசியல் சட்டத்தின் 15-வது கட்டளை முதல் பிரிவுக்கு முரணானது என்று கூறலாமா? இன்றுள்ளபடி, பிர்ஹாம்பூரிலிருந்து வரும் ஒரு மாணவனைக் கண்ணனூரில் உள்ள ஒரு கல் லூரியில் சேர்க்க வேண்டும். சென்னைப்பல்கலைக் கழகத்தில் சென்னை மாணவனுக்குள்ள ஒரு இடத்தில், கிழக்கு பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் சேரவேண்டுமென்றால் சேர்க்கப்பட வேண்டுமல்லவா? களு மற்றும் சிறுபான்மையினர் தங்கள் பிள்ளை க்கென நடத்தும் தனிப்பட்ட சமயக் கல்லூரி களுக்கு, அரசாங்கம் பொருள் உதவி செய்து வரு கின்றதென்று வைத்துக் கொள்வோம். அதில், அவ்வகுப்பைச் சேராத மாணவன் ஒருவன் சேர்ந்து பயில விரும்பினால், அதை அக்கல்லூரி நிர்வாகிகள் தடுக்க முடியா தல்லவா?