பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வகுப்புரிமைப் போராட்டம் எனவே, இதுதான் இன்றுள்ள அரசியல் சட் டம் என்றால், இதைமாற்றி (திருத்தி ) யமைப்பதற் கும் இதுவே தக்க வாய்ப்பும் சமயமும் ஆகும். ஆம், அறிஞர் பெருந்தகை தம் அறிக்கையை முடித்துள்ளவாறே தீர்ப்பின் விளைவு குறித்துப் பெரும்பாலான பொதுமக்களும் கருதியுள்ளனர். அரசியல் திட்டம் உருவான விதம் இவ்வாறு, விவாதத்திற்கும் வேதனைக்கும் காரணமாக உள்ள அரசியல் சட்டத்தின் 29-வது கட்டளை 2-ம் பிரிவு, சட்டத்தில் இடம் பெறச் செய் யப்பட்ட செய்தியே கூட, அதைக் கொண்டுவந்த வர்களின் நீண்டநாள் திட்டத்தின் விளைவு என்ப தைக் காட்டுவதாகும். அதைப் புகுத்திய பெரு மைக்குரியவர்கள் சட்ட நகல் கமிட்டி உறுப்பி னர்களாக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் அவர்களும், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் அவர் களுமே ஆவர். அவர்களின் இந்த 'நல்லெண்ணத்தின் பாற் பட்ட செயலைக் குறித்துச் சென்னை மேல்சபை யில் திரு. பி. நாராயணசாமி நாயுடு, எம். எல். சி அவர்கள் பேசுகையில் 'புதிய அரசியல் வகுக்கப்படும்போது, இந்தக் 'கம்யூனல் ஜி. ஓ' வுக்குப் பாதகமான பிரிவுகளை நீக்கிவிட வேண்டுமென்று நானே ஓர் திருத்தம் கொண்டுவந்தேன். அப்படி இருந்தும் இப்பிரிவுகள் அச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன. இவைகள் எப்படி இந்தச் சட்டத்தில் நுழைக்கப்பட்டன என் பதை அரசாங்கம் கண்டுபிடிக்கவேண்டும். மேலும் இவ் வழக்கில் வெற்றி கண்டோர்