பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 148 பலன் காணாதமுறையில், சென்னை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டும்." என எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடுத்துள் ளார். அதுமட்டுமன்றி, புதிய அரசியல் சட்டத்தின் நகலைத் தயாரித்த குழுவில் இடம் பெற்றவர்கள் யார் யார் என்பதை அறிவதும் அவசியம். அக் குழுவின் தலைவர், டாக்டர் பி. ஆர். அம்பேத்கார். மற்ற உறுப்பினர்கள், ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என். கோபாலசாமி ஐயங் கார், கே.எம். முன்ஷி, என். மாதவராவ், டி. பி. கைத்தான், சையது மகமது சாதுல்லா, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோராவர். உறுப்பி னர் அறுவர்களில் நால்வர் பார்ப்பனர். தென்னாட் டின் பிரதிநிதிகளாகச் சென்ற மூவருமே பார்ப் பனர். இவர்களின் கருத்தின்படித்தான் நகல் சட்டம் தயாராயிற்று. அந்த நகலே, 1946-ல் அமைக்கப்பட்ட அர சியல் நிர்ணயசபையில், பல திருத்தங்களோடும் சில கட்டளை நுழைப்புக்களோடும் நிறைவேற்றப் பட்டு, 1950 ஜனவரி 26-ல் இந்தியாவின் புது அர சியல் சட்டமாக நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது. அதன் பலனைத்தான் திராவிடமக்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இன்று அடைந்துள்ளனர். புது அரசியல் சட்டத்தின் நகலை உருவாக் குவதில், தமது ஆதிக்கம் நிலைக்கும்படிக் கவணித் துக்கொள்ளப் பார்ப்பனர்கள் பெரும்பான்மை யாக (மெஜாரிட்டி 7 ல் 4) இருந்தார்கள் என்பது மட்டுமன்றி, அதனால் ஏற்படக்கூடிய தீமைகளைக் கண்டறிந்து, திருத்தம் கொண்டுவரக்கூடிய தகுதி யுடையவர்களும், நாட்டுக்குரியவர்களின் பிரதிநிதி