பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வகுப்புரிமைப் போராட்டம் களும் ஆனவர்கள், அந்த அரசியல் நிர்ணய சபை யில் இடம்பெறவில்லை என்பதும் உண்மையாகும். தேர்தல் நடந்த விதம் புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றி யுள்ள, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் களோ பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப் பட்டவர்களல்ல. அவ்வுறுப்பினர்கள், அதற்குமுன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாகாண சட்டசபை உறுப்பினர்களாக வந்தவர் களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாவார்கள். அதாவது, அரசியல் நிர்ணய சபையே நோடித் தேர்தலால் அன்றி மறைமுகத் தேர்தலால் (Indirect Election) அமைந்ததாகும். அது மட்டு மன்றி, அந்த மறைமுகத் தேர்தலும் கூட, உரி மைக்கு இடமின்றி மேலிடத்துக் கட்டளை நிறை வேற்றச் சடங்காகவே முடிந்ததாகும். மேலிடத் திலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும்படி, ஒவ்வொருவருக்கும் இவ் வளவுபேர் வாக்களிக்க வேண்டும் என்று கட்டளை யிட்டு அம்முறையிலேயே ஒற்றை மாற்று ஓட்டுக் களைப் பதிவு செய்து 'சுதந்திர சாசனத்தைத் தயாரிக்கும்' குழுவின் தேர்தல் நிறைவேறியது. தேர்தலில், பொதுமக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களே, உரிமையோடு வாக்கு அளிக்கவில்லை, வாக்களிக்க வழியும் இல்லை. ஆனால் அ.நி. சபை மட்டும் நிரப்பப்பட்டுவிட்டது. உதாரணமாக, சென்னைக்கு உரிய 52-இடங் களில், கிருத்தவர்கட்கும் முஸ்லீம்களுக்கும் உரிய 7 - இடங்கள் தவிர்த்த 45-இடங்கட்கும், மேலிடத் தின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 15.பேர் பார்ப்பனர், 7-பேர் ஆதித்திராவிடர்,