பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 145 3-பேர் கிருத்தவர், 20-பேர் மட்டுமே பார்ப்பனரல் லாதார். நூற்றுக்கு 3-பேராக உள்ளவர்களுக்கோ 15-இடங்கள், 70-பேராக உள்ளவர்களுக்கோ 20- இடங்கள் மட்டுந்தான். அதுவே, பார்ப்பனர் களுக்கு ஒரு பெருங் கொண்டாட்டமாக அமைந் தது. அதிலும், பார்ப்பனர்களில் திறமைமிக்கவர் களும், மற்றவர்களில் 'அது' குறைந்தவர்களுமே பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மறை அதுமட்டுமின்றி, மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றும் முறையில், நடைபெற்ற முகத் தேர்தலில் வாக்களித்த சட்டசபை உறுப் பினர்களேனும், பொதுமக்கள் எல்லோருக்கும் பிரதிநிதிகளாவார்களா என்றால், இல்லை என்ற பதிலே கிடைக்கும். அப்பொழுது வாக்காளர் களாக இருந்தவர்களே 100-க்கு 11 பேர்கள்தான் அவர்களுள்ளும் வாக்கு அளிக்காதவர்கள், எதிர்த் தவர்கள் ஆகியோரது தொகையை நீக்கினால் அந்தச் சதவிகிதம் மேலும் குறையும். இந் நிலையில், அரசியல் நிர்ணய சபை பொது மக்கள் எல்லோரின் முழுச்சம்மதம் பெற்றதேயா கும் என்றோ,அங்கு நிறைவேற்றப்பட்ட 'அரசியல் சட்டம்' அனைவரையும் கட்டுப்படுத்தும் எனினும் அனைவரையும் திருப்தி செய்வதாகும் என்றோ எப்படிக் கூறமுடியும்? இவ்விதச் சிறப்புக்களோடு கூடிய அரசியல் நிர்ணய சபையில் நிறைவேறிய அரசியல் சட்டத் தின் படிதான், அதைத் தீட்டும் குழுவிலேயும் திருத்தும் சபையிலேயும் இருந்தவர், தனது அரிய சாதனையைத் தம் 'சோதராள் ' கண்டு பூரிக்கட் டும் என்ற நினைப்பிலே போலும், உலகம் என்ன கூறும் என்பதைக் கூட இலட்சியம் செய்யாமல், 10