பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 147 வேண்டும். அவர்கள் இந்திய அரசியலிடம் உண் மையான பற்றுக் கொள்ளவேண்டும்." வகுப்பு வாதத்திலேயே ஊறி உயர்வு பெற்ற அல்லாடி யார் தான், ஊருக்கு இந்த உபதேசத்தைச் செய்ய லானார், வகுப்பு நீதிச் சட்டத்தை ஒழித்துவிடச் செய்துள்ள திட்டத்திற்கு ஒத்திகையாக. ஆம், அப் பொழுது அவர் எண்ணியிருக்க மாட்டார் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை. அவர்மட்டுமல்ல, அக்ரஹாரமேகூட, வழக்கிலே வெற்றிகிடைத்த பின்தான் அதன் விபரீதத்தை உணர்ந்து வாயடைத்துப் போயிற்று. யில் அந்த தாம் வெற்றிபெற்றும் அதை வெளியிலே கூறமுடியாத நிலை 'அவர்களைப்' பொருத்தவரை இது துவே முதல் தடவையாகும். 'மௌனத்தைக்' கலைக்கத் துணிந்து முன்வந்த மேதாவிகள், ஸ்ரீமான்கள், முன்னாள் மந்திரி கே. பாஷ்யம் ஐயங்காரும், 'சுதந்தரா' ஆசிரியர் காசா. சுப்பாராவுமே யாவர். அவ்விருவரும் ஆரியகுல வீரதீர அசகாய சூரர்கள் என்பதை எப்படித் 'தம் இனத்தார்' தெரிந்துகொள்வது என்று எண்ணினர் போலும். பாஷ்யம் ஐயங்காரின் தீரம் அவ் வமயம், ஐயங்கார் பேசினார்: "நிர்வாகத் தில் திறமை குன்றி இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கைக்குப் பல்வேறு துன்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. சென்ற 25- வருடகாலமாக இருந்துவரும் கம்யூனல் ஜி. ஒ.வின் காரண மாகவே திறமையுள்ள மக்கள் நிர்வாகத்தில் இடம் பெறவில்லை. பிராமணர்கள் என்ற காரண தால் அவர்களைப் புறக்கணிப்பது தவறு," என்று.