பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வகுப்புரிமைப் போராட்டம் பிராமணர்கள் திறமைசாலிகளாம்! அவர்க ளின் 'திறமை' ஆண்டவனை அவதாரம் எடுக்கச் செய்வதிலிருந்து ஆங்கிலேயருக்கு ஆரூடம் கூறு வதுவரை - எந்தெந்த அற்புதங்களைச் செய்துள் ளது என்பதை மக்கள் அறிவார்கள். அந்தத் 'திறமை'யாளர்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதால்தான் அரசாங்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டதாம். இன்றும் அரசாங்க அலுவலில் 100-க்கு 50-பேர் அளவுக்கு, அந்தத் திறமைசாலி கள் இருக்கிறார்களே? இருந்தும் அவர்கள் பங்கு அளவுக்குக்கூட ஏன் நிர்வாகம் சரியாக இல்லை? என்ன கூறுவார் முன்னாள் அமைச்சர்? அவர்கள் 'திறமை' இப்பொழுது வேறு நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகிறது என்பாரா? அல்லது அவர்களெல்லாம், 'கோபத்தால்" இன்றைய சர்க்காரோடு ஒத்துழைக்கவில்லை என்பாரா ? இவைகளுக்குப் பதில் கூறவேண்டிய அவசிய மின்றியே, இந்தத் திமிர்வாதம் நிகழ்த்திய அதே பிரமுகர், இரண்டுமா தங்கள் ரண்டுமா தங்கள் பூர்த்தியாகு முன்பே தம் பேச்சை மாற்றிக்கொண்டார் 1950-செப்டம்பர் 25-ல், "அரசியல் வகுப்பு வாதம்" என்ற தலைப்பில், சென்னையில் அதே ஸ்ரீமான் பாஷ்யம் பேசியது கீழே தரப்பட்டிருக் கிறது. 66 இன்றுள்ள சாதிமுறை கட்டுப்பாடுகள் பிரிட்டிஷாரின் ஆட்சியுடன் வந்தவை. பார்ப் பனர்கள் சர்க்கார் உத்தியோகங்களில் பெருவாரி யான எண்ணிக்கையிலிருந்ததால், சர்க்கார் பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கும் முறையினாலன்றிப் பார்ப்பனருக்கு எனத் தனியாகச் சில இடங்களை ஒதுக்கி வைத்துவிட வேன்டுமென்னும் முயற்சி இரட்டை ஆட்சிக்' காலத்தில் செய்யப்பட்டது.