பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஏட்டிலேயே ராயினார். ஆணி வகுப்புரிமைப் போராட்டம் (சுதந்தரா) கொட்டிக்கொள்வா 'உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்து கொள்வதா யின் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஆனால் இந்திய அரசியல் திட்டத்தைக் ' கம்யூனல் ஜி. ஓ ' விற்குச் சாதகமாகத் திருத்தம் செய்வது மட்டும் கூடாது, என்று சர்வாதிகாரத் தோரணையில் கட் டளை இட்டுவிட்டு, அதற்குக்காரணம் என்ற நினைப் பில், "இன்று பெரும்பான்மையாக உள்ளவர் களின் விருப்பத்திற்காக, அரசியல் சட்டத்தை வேரோடு பெயர்த்தெறிந்து விட்டால், நாளைவரும் பெரும்பான்மையானவர்கள் செய்யும் அதே காரியத்தை எப்படித் தடுக்க முடியும்? பெரும்பான்மையோரின் பொறுமை இன்மை யைத் தடுத்துத் தாங்கிக் கொண்டால்தான், சிறு பான்மையோர் செய்யும் புரட்சிக்கு ஒரு தடுப்பாக அரசியல் சட்டம் இருக்கமுடியும் " என்று தீட்டு கிறார், படிப்பவர்கள் மிரண்டுவிடுவார்கள் என்ற எண்ணத்தில்! இதை எழுதியவரையும், இது நாள் வரை, ஏதோ மேதையாக எண்ணியிருந்தோமே என்று தான் படிப்பவர்கள் மிரட்சியடைந்திருப் பார்கள். அவரது கருத்தின்படி, (1) பெரும்பான்மையோர் விருப்பத்திற்காகக் கூட அரசியல் சட்டத்தைத் திருத்தக்கூடாது. (2) இந்த அரசியல் சட்டத்தை வருங்காலத் திலும் அந்தப் பெரும்பான்மையோரும் திருத்த அனுமதிக்கக்கூடாது. (3) பெரும்பான்மையோரின் 'இந்தக் கிளர்ச் சியை' (பொறுமையின்மையை) தடுத்துத் தாங்