பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 151 கிக் கொள்ளவேண்டும். (அடக்க வேண்டும்.) இல்லையானால் 'சிறுபான்மையோர்' புரட்சி செய்வார்கள் என்பது தெளிவாகிறது. இந்தப் பேருண்மைகளை அவர் எப்படித்தான் கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. இந்த அரசியல் சட்டத்தை (மத இனப் பாது காப்புக்கு ஏற்ப அமைத்திருப்பதால்) ஆண்டவன் மீது சத்தியமாக யாரும் திருத்தக்கூடாதாம். மனு நீதி, வேதவாக்கு, தேவகட்டளை போலவே வும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்! சிறுபான்மை யினரின் பிரதிநிதிகளே பெரும்பான்மையினராக இருந்து செய்துள்ள இந்தச் சட்டத்தைப் பெரும் பான்மையினர் திருத்த என்ன உரிமை உரிமை இருக் கிறது? அதுமட்டுமல்ல பெரும்பான்மையோரின் பொறுமை இன்மையைத் தடுத்துத் தாங்கிக் கொள்ளவேண்டும் அரசாங்கம். பெரும்பான்மை யோரின் எதிர்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டும். இவ்வளவும் நடைபெறாவிடில் சிறுபான்மையோர் (வேதமோதிகளோ, அவர்தம் அடிமைகளோ, வேறு எவரோ) புரட்சி செய்வார்கள். யாககுண் டத்தில் தீமூட்டி-இந்த உரைகளை, தேவகட்டளை யாகக் கொள்ளாதவர்களை யெல்லாம் - நீறாக்கிவிடு வார்கள். இதுவே அவரது உள்ளப் படப்பிடிப்பு. இதைக் கேட்டு அஞ்சும் அளவுக்கு இன்றைய மக் கள் மூட நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கவில்லை. 'மக்கள் ஆட்சி' மலரும் காலம் இது. குடி மக்களால், குடிமக்களுக்காக குடி மக்களைக் கொண்டே நடத்தப்படும் ஆட்சி. மேலும் நல் லாட்சியாக அமைய திட்டமிடும் காலம் இது. பார்ப்பனர்களாலும் அவர்தம் அடிமைகளாலும், பார்ப்பனர்களுக்கென்றே, பார்ப்பனர்களைக் கொண்டோ அவர்தம் அடிமைகளைக் கொண்டோ