பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வகுப்புரிமைப் போராட்டம் நடத்தப்பட்டுவந்த பார்ப்பனீய இருளாட்சி, பகுத் தறிவுப் பகலவனின் ஒளியால் மறைந்தொழியும் காலம் இது. என்றாலும் மேல்நாடுகளை யெல்லாம் சுற்றித்திரிந்தவரும், அனுதினமும் ஆங்கிலத்தி லேயே ஊறுபவருமாகிய, காசா, பிராமணராகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் இவ்வாறு தீட்டத் துணிந்தார். 'அரசியல் சட்டம்' திருத்தக்கூடாததோ, மாற்றக் கூடாததோ அல்ல. மக்களின் நல்வாழ்க் கைக்காகவே 'சட்டம்' தேவைப்படுகிறது, மக்க ளின் வாழ்க்கை காலச் சுழற்சியில் மாறுகின்ற போது, தேவைகளும் மாறுகின்றன. மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்பொழுது. புதுப்பிக்கப்பட்டுவரும் சட்டமே உயிர்ப் பண் புடையதாகும். மக்கள் வாழ்க்கை வளம்பெற, காலத்திற்கேற்ப சட்டம் திருத்தப்பட்டே. ஆக வேண்டும். நிலைத்துப்போன சட்டமோ செத்துப் போன சமூகத்தின் பாடையேயாகும். சட்டத்திலுள்ள ஏற்பாடு. புது அரசியல் சட்டத்திலோ, அதைத்திருத்து வதற்கான ஒரு ஏற்பாடும் இருக்கிறது, அதன் 20-வதுபகுதியிலுள்ள 368-வது கட்டளையில், " இந்த அரசியல் சட்டத்தைத் திருத் துவதென்றால், பாராளு மன்றத்தைச் (Union Parliament) சேர்ந்த ஏதாவது யில் அதற்கான தீர்மானம் (மசோதா) கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு சபையிலும், அதைச் சேர்ந்த மொத்த உறுப்பினர்களில் பெரும் பான்மையினராயும், (மெஜாரிட்டி) கலந்துகொண் டுள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங் குக்குக் குறையாதவர்களாயும் உள்ளோரது ஆதர