அரசியல் திட்டம் உருவான விதம் 153 வுடன் நிறைவேற்றப்படுமானால், அது குடியரசுத் தலைவரின் (ஜனாதிபதி) ஒப்புதலுக்கு விடப்பட வேண்டும். அவரது ஒப்புதலைப் (அங்கீகாரம்) பெற்ற பிறகு அரசியல் சட்டம், அந்த மசோதா வின்படி திருத்தப்பட்டதாகும்." என்று கூறப் பட்டுள்ளது. பெரும்பான்மையோர் விரும்பினாலும், அர சியல் சட்டத்தைத் திருத்துவது அடாத செய்கை, என்று கருதப்பட்டிருக்குமானால், இக் கட்டளை ஏன் இடம்பெற வேண்டும்? உரிமையும் தேவையும் அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது, கில உலகத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உரி மையேயாகும். மொழி, கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் வேறுபடாத 9 கோடி மக்களை மட் டுமே கொண்ட அமெரிக்க நாட்டு அரசியல் சட் டம் இதுவரை 21 முறை திருத்தப்பட்டுள்ளது. இங்கோ நிலைமையோ வேறு. மொழி, கலை, நாக ரிகப் பண்பாடுகளிலே மட்டுமின்றி, இனத்தாலும் இயல்பாலும் பல்வேறு முரண்பாடுகளுக்கு ஆட் பட்ட தனித்தனியான கூட்டங்களாக மக்கள் உள் ளனர். அப்படி யுள்ளவர்களும் ஏறத்தாழ 30 கோடி பேர். இந் நிலையில் புது அரசியல் சட் டமோ' மாகாண உரிமைகளையும் குறைத்து யூனி யன். சர்க்காரின் அதிகாரத்தை அதிகப்படுத்தி, சிறு, சிறு உரிமைகளுக்குங் கூடப், பாராளுமன் றத்தைக் கொண்டே செயலாற்ற வேண் டிய நிலை யில் மக்களை வைத்துள்ளது. வர்க்கத்திற்கு ஒரு வட்டாரமும் அதற்கென்று ஒரு பாராளுமன றமும் தனி அரசியல் சட்டமும் அமையாத நிலையில், பல வர்க்கங்களும் பிணைக்கப்பட்டு அமைக்கப் பட் டுள்ள அரசியல் சட்டம், பலப்பல திருத்தங்களுக்கு
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/159
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
