154 இடம் வகுப்புரிமைப் போராட்டம் தந்தே தீரவேண்டும். தீரவேண்டும். ரப்பர் போல இழுக்க நீளத்தான் வேண்டும். இல்லையானால் கயிறு' போல அறுந்துபோகத்தான் நேரிடும். சிறுபான்மையினரின் எடுபிடிகளாக, ஏவல் தொண்டினராக, எதிர்த்துப் பேசாத மௌடிக ளாக ஆக்கப்பட்டுக் கிடந்த பெரும்பான்மையினர் தான், தென்னாட்டைப் பொருத்தவரையில் இன்று விழிப்புணர்ச்சி யடைந்து, இழந்த வாழ்வை மீட் டுக்கொள்ள, சட்டப்படியான வகுப்புரிமையை மறுபடியும் நிலைநாட்ட முரசு கொட்டுகின்றனர். அந்தப் பெரும்பான்மையினரின் உரிமை முழக் கந்தான், காசாவைக் கருத்திழந்து தீட்டச் செய் திருக்கிறது. எனினும் காசாவும் அவர்தம் இனத் தவரில் பலரும், தமது தவறான கருத்தையும் போக்கையும் இப்பொழுதேனும் மாற்றிக் கொண்டு, பெரும்பான்மையினராகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 'நல்லது ஆற்றாவிடினும் அல்லது செய்தல் தவிர்ப்பாராயின்' அதுவே அவர்கள் நாட்டிற்குச் செய்யும் நற்பெருந் தொண்டாகும். மத்திய சர்க்காரின் தீர்மானம் இவ்வாறு தென்னாட்டுப் பெருங்குடி மக்கள், தலைக்குமேல் வந்த விபத்தைத் தவிர்ப்பதற்கு முனைந்து நிற்கும்போதே, இந்திய சர்க்கார் 14-9-50-ல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை குறித்து ஒரு புதிய முடிவு செய்தது. அதன்படி, 'தாழ்த்தப்பட்ட சாதியினர், மலைசாதியினர், ஆங் கிலோ இந்தியர் ஆகியோருக்கு மட்டுமே இனி இந்திய சர்க்கார் ஊழியங்களில் இடங்கள் ஒதுக்கி வைப்பது" என்றும், "புது அரசியல் சட்டப்படி, தாழ்த்தப்பட்டோர், மலைசாதியினர், ஆங்கிலோ இந்தியர், பிற்பட்ட வகுப்பார், ஆகியோரைத் தவிர்த்து மாகாண சர்க்கார் பதவி நியமனங்கள்,
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/160
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
