அரசியல் திட்டம் உருவான விதம் 155 மதம், இனம், சாதி, பால் ஆகியவற்றின் அடிப் படையில் எவ்வித வேறுபாடுகளும் கையாளப் படக்கூடாது' என்றும் தீர்மானித்துள்ள தாக அறிவிக்கப்பட்டது. மட்டும் மேலும், "இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு மாகாண சர்க்கார் உத்தியோகங்களில், போட்டி வைக்காது பதவியளிப்பதற்கும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டியதற்குமுரிய சட்டங்கள், மத்திய சர்க்காரால் கைக்கொள்ளப் பட்டன" என்றும் தெரிவிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஆங்கிலோ இந் தியர்களுக்கும் எக்காரணங்களைக் கொண்டு மத்திய அரசாங்க ஊழியத்தில் இடம் ஒதுக்கப்பட்டதோ, அதைவிட அதிக காரணங்களைக் கொண்ட, தென் னாட்டுப் பெருங்குடி மக்களுக்கு (திராவிடர்களுக்கு) மட்டும், மத்திய அரசாங்க ஊழியத்தில் இடம் ஒதுக்கப்படாதது ஏன்? "தென்னாட்டுப் பார்ப் பனரல்லாதார் தான், அரசியல் அனாதைகளா யிற்றே; அவர்கள் சார்பில் பேச, வாதிட, யார் என்ற முன்வரப் போகிறார்கள்" போலும். எண்ணம் மாகாண அரசாங்கத்திலோ, பிற்பட்ட வகுப் பார், என்ற காரணத்தோடு கூடிய பெயரால் இடம் ஒதுக்கிவைப்பதற்கு வழி இருக்கிறது என் றாலும், வகுப்பு நீதியை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் வடிவம் நிலைக்குமா என்பது ஐயந் தான். இந்துக்களும் முஸ்லீம்களும் சீக்கியர்களும் வெவ்வேறு மதத்தவர்களாதலினாலும், தாழ்த்தப் பட்டோர் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ளதனாலும், 'விகிதாச்சாரம்' அளிக்கப்படுவது அவசியம் என்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/161
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
