158 வகுப்புரிமைப் போராட்டம் பதை ஒப்புக்கொள்ளும் எவர்தான், அவர்களை விட வேறுபட்டும், ஒடுக்கப்பட்டும் உள்ள மற்ற வகுப்பாருக்கு "விகிதாச்சார உரிமை" தேவை யில்லை என்று கருத முடியும்? 'இந்து 'பல ரகம். P இங்கு 'இந்துக்கள்' என்று கூறப்பட்டுள்ள எல்லோரும் ஒரே 'சமயத்தவரா? (இந்துமதமே ஒரு சமயம் அல்லவே.) ஒரே இனத்தவரா? ஒரே கலை, மொழி, நாகரிகப் பண்பினரா? அல்லது ஒரே முறை வாழ்க்கையினரா? என்பதையெல் லாம் எண்ணிப்பாராமலே, ஒரே காட்டிலே திரிந் தவை என்ற காரணத்திலேயே, நரியையும் பரியை யும், நாயையும் பூனையையும் ஒரே கூண்டிலே அடைப்பதைப் போல, எல்லோரையும்இந்து' என்ற மதக்கூண்டிலே அடைத்துவிட்டு அவர் களில் வல்லவர்களை வாழவிட்டு விடுவது எப்படி நியாயமாகும்? மேலும், இந்துவுக்கும் முஸ்லீமுக்கும் உள்ள முரண்பாட்டைவிடப் பார்ப்பனருக்கும் அல்லா தாருக்கும் (வடமொழி வேதசாஸ்திர மனுநீதியைப் பின்பற்றும் ஆரியர்களுக்கும், தென் தமிழ் இலக் கியக்குறள் நெறியைப் பின்பற்றும் தமிழர்களுக் கும்) உள்ள முரண்பாடு அதிகம் என்பதும், இந் துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உள்ள வேற்று மையைவிட, இந்து வருணங்களுக்கிடையிலே (நால் வகை சாதிகட்கும் இடையிலே) உள்ள வேற்றுமை ஏராளம் என்பதும், மற்றவர்களோடு நோக்க, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை ஒத்தே, பார்ப் பனரோடு நோக்க அல்லாதார் நிலையும், வடநாட்டு இந்துவோடு நோக்க திராவிடரின் நிலையும் அமைந்துள்ளன என்பதும், மறுக்கமுவுயா தவை களாகும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/162
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
