பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 157 'இந்து மதத்தின் சூதுத் திட்டம்' 'வேற்றுமைகளின்' விளைவிடமாகவும்' 'முரண் பாடுகளின்' பிறப்பிடமாகவும், எத்தர்கள் சிலர் வாழப்பலரை ஏமாளிகளாக்கும்மடமாகவும் உள்ள மதமாகிய இந்து என்ற பெயர்ப் பட்டியலில் எப் படியோ இடம்பெறச் செய்யப்பட்டுவிட்ட காரணத் தாலேயே, இந்து' வாகக் குறிப்பிடப்படும் பல திறத்தாரும் விகிதாச்சாரப்படி உரிமைபெறக் கூடாது என்பது எண்ணம் போலும். 'இந்து மதம்' என்ற பூதேவர்களின் சூழ்ச்சிப் பொறியில் சிக்கிச் சிதைந்தவர்கள் ஏராளம். அதில் அகப்பட்டோரின் உழைப்பும் உடமையும் மட்டுமன்றி உரிமையும் உணர்வும்கூட பூசுரர்க ளின் சுகபோக வாழ்வு நடைபெற சுரண்டப்பட்டு வந்துள்ளது பன்னெடுங் காலமாக. அதே கூட் டம். இப்பொழுதும் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அந்தச் "சூழ்ச்சிப் பொறியைக் " கூட அல்ல, அதன் பெயரான 'இந்து' என்ற சொல் லையே பயன் படுத்திக் கொண்டுள்ளது, ஆம், 'இந்து' என்ற பெயருள்ளவரை, அதன் செல்வாக்கால் அவர்கள் மட்டுமே 'இகபர சுகம்' இரண்டையும் இணையின்றி நுகரவும், மற்றவர்கள் எல்லாம் இளித்தவாயர்களாக இருக்கவுமே நேரி டும். மதத்திலோ குருமார்கள், கல்வியிலோ ஆசான் கள், சமூகத்திலோ உயர் சாதியினர், பொருளா தாரத்திலோ சுரண்டல் இயந்திர சொந்தக்காரர் கள், அரசாங்க அலுவலிலோ அதிகாரிகள் - என் றுள்ள ஆதிக்க முறை நிலைத்து நிற்கவே வழி தேடிக்கொண்டுள்ளனர், 'இந்து' என்பவர்களுக் கிடையில் வகுப்புரிமை வழங்குவதங்கு இடமின்றிச்