பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வகுப்புரிமைப் போராட்டம் சட்டம் செய்யவும், தீர்மானிக்கவும் செய்திருப்பது மூலமாக. மேலும், இவ்வாறு தீர்மானிக்கப்படுவதற்குச் சில நாட்கள் முன்பே, மைசூர் சர்க்காருக்கு மத் திய சர்க்காரிடமிருந்து வந்த ஓர் அறிவிப்பில், 'கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்ப்பதில் எந்தவித சாதி, வகுப்பு வேறுபாடும் கவனிக்கப் படக் கூடாதென்றும், அவ்விதம் செய்வது அரசி யல் சட்டவிதிக்கு முரணானது' என்றும் தெரிவிக் கப்பட்டது. இவ்வாறு தென்னாட்டுப் பார்ப்பனர் களின் முயற்சி, பலப்பல வடிவங்களைப் பெற்று வெளிவந்தபடி உள்ளன. 'சதியின்' சந்தோஷ ஆரவாரம் ஆம்! இந்துமதம் என்ற 'சூதுப்பொறியில்' தயாரான அபூர்வக் கருவியே 'சாதி' என்பது. அந்த 'சாதி'யின் பெயரால், 'சமூக வாழ்வையே' 'சதிக்கு' ஆளாக்கலாம். ஆனால், அதே 'சாதியின்' பெயரால் இழைக்கப்பட்ட கொடுமையைத் துடைத்து, 'நீதியை' நிலைநாட்டுவது மட்டும் கூடாது, முடியாது. இந்நிலையிலே 'சட்டம்' ஆட்சி செலுத்துவது காண 'நீதி' கண்ணீர் விடுகிறது, கதறுகிறது. 'சர்க்கார்' இயந்திரமோ சுற்றிய படி இருப்பது கண்டு 'சதி' சந்தோஷ ஆரவாரம் செய்கிறது. இந்நிலையில் 'கம்யூனல் ஜி. ஓ.'வை ஒழிப்பதற் காகவே மேலும் சில வழக்குகளும் தொடுக்கப்பட லாயின. தொடரப்பட்ட வழக்குகள். சென்னை, உயர்நீதி மன்றத்தின் முன், கம்யூ னல் ஜி.ஓ. வின்படி அன்றித் தகுதிப்படி, தன்னை