160 வகுப்புரிமைப் போராட்டம் பரில், அரசியல் சட்டத்தின் 32-வது கட்டளைப்படி சர்வநீதிமன்றத்தில் விண்ணப்பித்துக் கொண்டுள் ளார். சென்னை அரசாங்கமும், பொதுமக்களுக்கு வாக்களித்துள்ளபடி, சென்னை உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பின்மீது, சர்வநீதி மன்றத்துக்கு (அப் பீல்) விண்ணப்பம் செய்துகொண்டுள்ளது. அந்த அப்பீல் சர்வநீதி மன்றத்தின் வசதிகளை முன்னிட்டு சென்னை உயர்நீதி மன் றத்தின் மூலமாகவே ஏற் றுக்கொள்ளப்பட்டுமிருக்கிறது. ஒருபுறம் கல்வித்துறையிலும் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் நிலைக்கவேண்டும் என்று பொதுமக் களின் சார்பில் அரசாங்கமும் அப்பீல் செய்துள்ள அதேசமயத்தில் ஆதிக்கவாதிகளோ, உத்தியோ கத் துறையிலும் கம்யூனல் ஜி.ஓ. ஒழிக்கப்பட இதுவேதருணம் என்று வழக்குத் தொடுத்தபடி உள்ளனர். அரசியல் சட்டத்தின்படி, சர்வநீதி மன்றத்தின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும். அதன்படி, வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்துக்குச் சட்டத்தில் இடமில்லை என்று ஏற்படுமானால், அரசியல் சட்டத்தைத் திருத்து வதைத் தவிர வேறு வழியில்லை. "திருத்தப்படவேண்டும்" என்பதே மக்களின் தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை எந்தக் குடியரசும் அலட் சியம் செய்யமுடியாது; செய்யும் எந்த ஆட்சியும் நீலைக்க முடியாது. மக்களின் கடமை எனவே, பொதுமக்கள், தமது உரிமையை நிலைநிறுத்த, அரசாங்கம் வாக்களித்துள்ளபடி செயலாற்றவும், வெற்றிகிட்டவும், அயராமலும்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/166
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
