அரசியல் திட்டம் உருவான விதம் 161 மறவாமலும், அற்பர்களின் சூதுக்கு ஆளாகாம லும், உற்சாகத்தோடும் உறுதியோடும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். "அரசியல் சட்டத்தைத் திருத்தியேனும் வகுப்புரிமையை நிலைநாட்டியே தீரு வோம்" என்ற உறுதியோடு, கட்சி வேறுபாடின் றித் தென்னாடே ஒன்றுபட்டுத் தொடங்கியுள்ள இவ்வுரிமைக் கிளர்ச்சி வெற்றிபெறாமற்போகாது. 'வெற்றியின்றேல் வாழ்வும் இல்லை' என்பதை ஒவ் வொருவரும் உணர்ந்து வருகின்றனர். உணர்ச்சி பரவியபடி இருக்கிறது. அந்த நிலை சர்வநீதி மன்றத் தீர்ப்பினாலோ, அரசியல் சட்டத் திருத்தத்தினாலோ, வகுப்பு நீதியை நாட்ட வழியில்லாது போகுமானால் இந்த 'முயற்சி' அத்துடன் நின்றுவிடாது. தென்னாட்டார் வாழ் ல், உரிமையில் குறுக்கிடுவது எதுவானாலும் அது வீழ்த்தப்பட்டேதீரும். வடநாட்டார் ஆதிக்கமே அதற்குத் தடையாக அமையுமானால், தென்னாட் டார், அத்தடையை முறியடிப்பதற்காகத் தொடங் கும் அறப்போர், ' திராவிட நாடு திராவிடருக்கே" என்ற முழக்கமாக வளர்ந்து, தனி அரசியல் நிர் ணய சபையையே அமைக்கும் என்பதில் ஐய மில்லை. இன்றைய ஆட்சி முறையால் வடவரின் அரசி யல், பொருளாதார ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு, சிக்கிச் சீரழிகிறோமே என்பதை முன்பே உணர்ந்து குமுறிக்கிடக்கும் காளைகள், இந்திய அர சியல் சட்டம் ஒரு பொன்விலங்கு, இரும்புத்தளை, நியாயமான உரிமைகளுக்காகக் கூட அதைத் திருத்துவதற்கும் இடமில்லை, என்று கண்டுகொள் வார்களானால் அதை உடைத்தெறியத் தயங்கமாட் டார்கள் திராவிட மக்கள் எத்தனை எத்தனை பிரி வாக இருப்பினும ஒன்றுபட்டுவிடுவார்கள், திரா 11
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/167
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
