162 வகுப்புரிமைப் போராட்டம் விடத்தின் விடுதலைக்காகத் துவக்கப்படும் அறப் போரின் முரசொலி கேட்டவுடன். கைக அந்நிலை கூடாது என்று எண்ணுபவர்கள், சிறிதுகாலமேனும் நீட்டித்துச் செல்லக் கொள்ளக் கூடிய இறுதி முயற்சியெல்லாம் வகுப் புரிமைச் சட்டத்தை நிலைநாட்டச்செய்வதேயாகும். து நிலைநாட்டப்படாவிடில், நிலை என்று எண்ணி யுள்ள வேறுபலவும் நிலையற்றுப்போய், புதியன பலவும் நிலைநாட்டப்பட்டே தீரும் என்பதை ஆட்சியாளர் நன்கு உணரவேண்டும். வெற்றிக்குப் பின் 'வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவு' அரசியல் சட்டப்படி நிலைநாட்டப்பட்ட பின்னரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் சில உள்ளன. அவையாவன:- (அ) பெயர் மாற்றம் 'கம்யூனல் ஜி.ஓ.' பெயரளவில், வகுப்புக்களை நிலைநிறுத்தப் பயன் படுவதுபோல ஒலித்தாலும் நோக்கத்தாலும், பயனாலும் மதக் கொடுமையால் விளைந்த வகுப்பு வேற்றுமைகளையும், உயர்வு தாழ் வுகளையும் ஒழித்துச் சமூக சமத்துவத்தைத் தோற்றுவிப்பதாலும், பெயரைக் கொண்டே சிலர் தவறான கருத்தைப் பரப்பிவருவதைத் தடுப்பது அவசியமாதலாலும், கம்யுனல் (Communal) என்ற சொல்லுக்குச் சமூகத்தைப்பற்றிய (Pertaining to the Society) என்றொரு பொருளும் உளவாதலா லும், அதன் பெயர்" சமூக நீதிச்சட்டம் " அல் லது சமூக சமத்துவச் சட்டம் " (Social Justice Law] என்றே இனி வழங்கச் செய்ய வேண்டும். 66 99
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
