வகுப்பு நீதி வளர்ந்த விதம் 11 உழுபவர்கட்கும், கட்டை வெட்டுபவர்கட்கும், கல் உடைப்பவர்கட்கும் இந்த உத்தியோக விகிதாச் சார உத்தரவு குறித்து அறிந்துகொள்ள வாய்ப் புத்தான் ஏது? அறிவிக்கத்தான் யார் உள்ள னர்? அறிவித்தாலும் அறியத்தான் திறன் ஏது? ஆதிக்க வெறியரின் சதி மற்றும், தம் சுயநலம் காரணமாக, இந்தச் சமூக நீதிச்சட்டத்திற்கு மாறாக, ஆதிக்கவாதி களின் தினப்பதிப்புக்களும் வாரப்பதிப்புக்களும், வாத்தியார்களும், தலைவர்களும், தொண்டர்களும் -ஆதிக்க வெறியோடு நெடுநாட்களாகவே தொடர்ந்து நடத்திவந்த, உண்மையை மறைக் கும் பொய்ப் பிரசாரத்தினாலேயே இன்றளவும் இதனைக் குறித்துத் தெளிவு பெறாமலே பிற்பட்ட வகுப்பு மக்களிலே பலர் உள்ளனர். என்றாலும், படித்த சிலரே உண்மையை உணர்ந்துள்ள நிலையில், இதனை ஆதரித்து இவ் வளவு எழுச்சி காணப்படுகின்றதெனில், எல்லோ ரு மே இதை உணர்ந்திருந்தால், ஆதிக்கவாதிகள், ந்தத் திட்டத்தை ஆட்டவும் அசைக்கவும் கூடக் கருதியிருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். 'கம்யூனல் ஜி ஓ ' - வகுப்பு வாதச்சட்டம், வகுப்புத் துவேஷிகளின் திட்டம், வெள்ளைக்காரர் களின் பிரித்தாளும் சூழ்ச்சித்திட்டம், மதத் துவேஷிகளின் சட்டம், தேசத்துரோகிகளின் சூதுத்திட்டம், திறமையையும் தகுதியையும் பாழாக் கும் தவறான ஆணை, தனி மனிதர்களின் அடிப் படை உரிமையையே பறிக்கும் உத்தரவு-என்று ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு வகையாகத் திரித்துக்கூறி தூற்றிப்பேசி, கண்டித்துத் தீட்டித் தமது தேசிய செல்வாக்கையும் பயன்படுத்திப் ?
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
