184 வகுப்புரிமைப் போராட்டம் முன்னேறிய வகுப்பாரே அவற்றையும் அடையும் படியும், பல தர அரசாங்க உத்தியோகங்கட்கும் அவசியமான அளவினும் அதிகமான அளவு கேட் கப்படும் 'அடிப்படைத் தகுதியை' அவசியமான அள வாகக் குறைக்க வேண்டும். ஊ) ஒரே வகுப்பு ஆதிக்கம் தொலைய (க) எக்காரணத்தைக் கொண்டும், உத்தியோ கங்கட்குத் தேர்ந்தெடுக்கும் குழுக்களில் (Service Commission) தமது வகுப்புக்குரிய விகிதத்தைப் போல், 3-மடங்குக்கு மேல் அரசாங்க உத்தியோ கங்களில் இடம் பெற்றுள்ள வகுப்பார், நியமிக்கப் படக்கூடாது. (ங) எந்த ஒரு வகுப்பாரும், தமக்கு உரிய விகிதத்தைப் போல் 4-பங்குக்கு மேல் அரசாங்கப் பதவிகளிலோ, அதற்கு வாயிலாக உள்ள உயர் தரக் கல்வித்துறையிலோ இடம் பெற்றிருப்பார் களானால், இடம் பெற்றுள்ளவர்கள் தொகை 4 பங்குக்குக்குறைந்துவரும் வரையில், அவ்வகுப்பார் அரசாங்கத்திலும், கல்லூரிகளிலும் நியமிக்கப்படு வது தடுக்கப்படவேண்டும். 4-பங்கினும் குறையும் காலத்து அந்த அளவுக்குமேற் போகாமல் வகுப்பு விகிதாசாரப்படி, அனுமதிக்கப்படலாம். (இந்த ஏற்பாடு, 50 ரூபாய்க்குக் குறைந்த மாதச் சம்பளம் பெறுகிறவர்களைக் கட்டுப்படுத்தத்தேவை இல்லை.) (எ) பிற்போக்கினர் சமத்துவம் பெற பிற்பட்ட வகுப்பினருள்ளும், மிகவும் பிற் போக்கினராக உள்ள, பின்னணிப் பார்ப்பனரல் லாதார், ஆதிதிராவிடர், மலைசாதியினர் ஆகியோர், இதுவரையில் இழந்து வந்துள்ள உரிமைகளை எளி தில் பெறும் பொருட்டு, அடிப்படைத் தகுதி
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/170
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
