பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்குப் பின் 165 யோடு விண்ணப்பித்துக் கொள்வாரானால், அப் படி விண்ணப்பித்துக் கொள்ளும் அனைவருக்கும், அரசாங்கத்தில் உத்தியோகம் அளித்தபிறகே, மற்ற வகுப்பாருக்கு விகிதாச்சாரப்படி உத்தியோ கம் வழங்கவேண்டும். (இந்த ஏற்பாடு, சுமார் 15 ஆண்டுகள் வரையிலேனும் நிலை பெறவேண்டும்.) (ஏ) உயர்வளிக்கும் முறை (க) ஒரு உத்தியோகத்திலிருந்து, மேல்தரத் திற்கு உயர்வளிப்பதற்கும், 'சமூக நீதிச் சட்டத் தின்' விகிதாச்சாரத்தைக் கைக்கொள்ள வேண் டும். (ங) உயர்வளிக்கப்பட வேண்டிய மேல்தர உத்தியோகத்தில், எந்த ஒரு வகுப்பாரேனும் தமது விகிதத்தைப் போல் 2-பங்குக்கு மேல் இடம் பெற்றிருந்தாலும், அவ்வகுப்பாரை நீக்கி, முறைப் படி வருகின்ற மற்றொரு வகுப்பாருக்கே உயர் வளிக்க வேண்டும். [அல்லது] ஒரேதர உத்தியோகத்தில், உள்ளவர்களில் ஒரு பிற்பட்ட வகுப்பினர் குறைந்த அளவு 4- ஆண்டுகள் பணியாற்றி இருப்பாரானால், அவரை விட அதிக ஆண்டுகள் பணியாற்றி யிருப்பினும் எந்த முன்னேற்ற (பார்ப்பன) வகுப்பாரையும்விட, உயர்வளிக்கப்படத் தகுதியும் உரிமையும் உள்ள வராகக் கொள்ளப்படவேண்டும். (அண்மையில், மைசூர் பல்கலைக்கழக நிய மனக்குழு கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்வளிக் கும் முறை குறித்து, இவ்விதமே முடிவுசெய்தது என்பது குறிப்பிடத் தக்கது.) (ஐ) மத்திய சர்க்கார் கடமை. (அ) சென்னை மாகாணத்திலுள்ள மத்திய சர்க்கார் இலாக்காக்களான, ரயில்வே, தபால்தந்தி,