168 வகுப்புரிமைப் போராட்டம் களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாகி விடுவதால், சாதி உணர்ச்சி அடியோடு ஒழிக்கப் படுகின்ற காலம் வரையில்-பார்ப்பன வகுப்பார் ஆரம்ப ஆசிரியர்களாக வருவதும், ஆசிரியப் பயிற் சிக் கல்லூரிகளில் (Lower Grade, Higher Grade & Secondary Grade Training Schools) இடம் பெறுவதும் தடைசெய்யப்பட வேண்டும். பெண் களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். (ஞ) பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களைச் சார்ந்த மாணவர்கள், கல்லூரி உயர்நிலைப் பள்ளிக் கட்ட ணங்கள் அளவில் அரசாங்கச் சலுகை பெற்றாலும் அவர்களது குடும்ப ஏழ்மை நிலையாலும் வறுமை யாலுமே பெரிதும் கவலை கொண்டோராகிக் கல்வியில் கவனம் செலுத்த முடியாத பரிதாபத் திற்கு ஆளாவதால் அப்படிப் பட்டவர்கள், நியாய மான காரணங்களோடு விண்ணப்பித்துக் கொள் வார்களானால், படிப்பு முடிந்த பின்னர் அவர்களை அரசாங்க வேலையில் அமர்த்திக் கொண்டு ஊதி யத்திலிருந்து கடனை அடைத்துக் கொள்வது என்ற ஏற்பாட்டின் மீது‘கடன்' தந்து உதவ அரசாங்கம் முன் வரவேண்டும். அல்லது, வறு மைக்காளான பிற்பட்ட வகுப்புப் பிள்ளைகளை யெல்லாம் அரசாங்கம் தனது வளர்ப்பிலேயும் பொறுப்பிலேயுமே வைத்துக் கல்வி கற்பிக்க முன் வர வேண்டும். மேற்காணும் சுருத்துக்களை உட்கொண்டு நிறைவேற்றப்படும் சட்டம் இவ்வாறு அமைக்கப் படலாம்:- கம்யூனல் ஜி.ஒ. வின் நியாயத்தையும் நோக் கத்தையும் உட்கொண்டு அமைக்கப்படும் இச் சட் டம் "சமூக நீதிச்சட்டம்" என்றே வழங்கப்படும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
