பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வகுப்புரிமைப் போராட்டம் 3, 9, 15, 21, 27, 83 ஆகியவை ஆதித்திராவிடர்கட் கும், 6,18,30 ஆகியவை முஸ்லீம்கட்கும் 12, கிருஸ் தவர் கட்கும் 24, பார்ப்பனாகட்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பு :- [கலப்பு மணம் செய்து கொண்டவர் கடகு என்று வழங்கப்பட்டுள்ள இடம் பெரும் பான்மை கருதி பார்ப்பனரல்லாதாருக்கு உரிய இடத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. தமக்கு அளிக்கப்பட்டுள்ளது குறைவு என்று கருத இட முள்ள கிருஸ்தவர்களில் பலரும் கலப்பு மணம் செய்து கொண்டுள்ளமையின் அக்குறைவு தாரா ளமாக நிறைவு செய்யப்படுவதும் அறியத்தக்கது. பார்ப்பனர்கட்கு வகுப்பு விகிதப்படி என்பதற்கே இடமில்லை.] குறைவு ஏறத்தாழ, இந்த வடிவில் 'சமூக நீதிச்சட்டம்' நிறைவேற்றப்படும் நாளே, சமூக நீதி தழைக் கும் நாளாகும். அச்சட்டம் வெற்றி பெற, மேலே குறிப்பிட்ட மற்ற கடமைகளையும் அரசாங்கம் நிறைவேற்றுவது இன்றியமையாததாகும். அர சாங்கம் நிறைவேற்றுமா என்பதல்ல கேள்வி; அரசாங்கத்தை நிறைவேற்றச் செய்யும் வலிமை யும், ஒத்துழைப்பும் பொதுமக்களிடம் இருக் கிறதா என்பதே கேள்வியாகும்.