பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுக்கமுடியாத சான்றுகள் இதுகாறும் வரையப்பட்டுள்ளவற்றைக் கண் டும், 'கம்யூனல் ஜி. ஓ' குறித்தும், அதன் நோக் கம் குறித்தும், ஐயப்படுபவர்கள், கீழ்க்காணும் சான்றுகளைக் காணின் தெளிவு பெறுவர் என்பது உறுதியாகும் சென்னைப் பல்கலைக் கழகத் தீர்ப்பு சென்னை மாகாணத்திலுள்ள அரசாங்கத் தொழிற் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வகுப்புவாரி முறையைக் குறைகூறி, அம்முறை நீக்கப்படவேண்டுமென, நதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்த "பல்கலைக்கழகக் கமிஷன்" தனது அறிக்கையில் வெளியிட்டிருந்தது. அதைக்குறித்தே (195J ஜூன் மாதத்தில்) சென்னைப் பல்கலைக் கழக சிண்டிகேட் அதை ஆராய்ந்து ஓர் முடிவிற்கு வந்தது. அந்த அவை யில் பல பார்ப்பன அறிஞர்களும் இடம் பெற்றிருந் தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. முடிவை விளக்கும் கருத்துரைகளே இவை: அந்த "தென்னிந்தியாவில் இந்த வகுப்பு விகிதாச் சாரக் கொள்கை பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இக்கருத்து வேற்றுமை கொண்ட இரு சாராரும் தமது கருத்தையே வலியுறுத்தி வருகின் றனர். ஆனால் பல்கலைக் கழகக் கமிஷனோ, இம் மாறுபட்ட கருத்துடையோருள் ஒரு சாராரின் கருத்தினை மட்டுமே ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பல்கலைக் கழகத்தார் எந்தத் தனிப்பட்ட கொள்கைக்கும் ஆதரவு தருபவர்களல்ல. ஆனால் மாறுபட்ட கருத்துடையோருக்கும் இடமளிக்க