பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வகுப்புரிமைப் போராட்டம் பார்த்து, இவ்வளவிலும் சமூக நீதித்திட்டத்தைச் சாய்க்க முடியாதது கண்டு, சமயத்தினை எதிர் பார்த்து இருந்து, விடுதலைக் கொண்டாட்டத் தின் சந்தடி சாக்கில், அரசியல் சட்ட நகல் தீட்டும் வேளையில், ஆதிக்கவாதிகள் தமது சுயநலம் ஓங் கும் வழி, சட்டத்தைத் திருத்தி, சட்டசபையில் நிறைவேற்றிவிட்டு, வீடுதிரும்பி, தமது வேதபுத் தகமாகிய சட்டபுத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி, வழக்கு மன்றம் ஏறித் தமது வாய்த் திறமை காட்டிச் சமூக நீதித்திட்டத்தினைச் சாய்த் துள்ளனர். ஆனால், இவைகளை அறியாதார், ஆதிக்கவாதி களின் கூற்றையே நம்பி, "கம்யூனல் ஜி. ஓ என்றாலே அந்த ஆங்கிலச் சொல்லின் பொரு ளின்படியே," வகுப்புவாத (பேத) அரசாங்க உத்தரவு" என்றே மனத்தில் கொண்டு தடுமாறு கின்றனர். உண்மையில் சொல்லளவில். அவ் வாறு நின்றாலும், அதன் அடிப்படையையும், நோக்கத்தையும், பயனையும் அறிபவர்கள், அதனை "வகுப்பு உரிமையை நிலை நாட்டும் அரசா ங்க உத்தரவு என்பதை உணர்ந்து போற்ற முன்வருவர். இதன் உண்மையை உணர, இத்திட்டம், எந் நிலையில் யாரால் கொண்டு வரப்பட்டது என்பதை யும், இதனை யார் அன்றும் இன்றும் எதிர்க்கிறார் கள், ஏன் எதிர்க்கிறார்கள் என்பதையும் அறிவது அவசியமாகும். அவர்கள் வாழ்வுபெற்ற விதம் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பொதுவாக தியத் துணைக் கண்டம் முழுவதிலுமே, ஆங்கிலே யர் ஆட்சி ஏற்பட்ட பின்பு, நாட்டினை ஆண்ட