பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வகுப்புரிமைப் போராட்டம் கலைக் கழகத்தின் நோக்கம்.ஆனால், அக்கருத்துக் களால், நடைமுறையில் இருக்கும் உண்மைகளை மறைப்பதற்கில்லை. இவை, சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் அவையின் கருத்துரைகளிற் சில பகுதிகளேயாம். முற்றும் காணில் மேலும் விளக்கம்பெறலாம். இதைக் கண்டபின்பும், கல்வித்துறையிலுமா 'கம் யூனல் ஜி.ஓ. ? என்ற கேள்வி எழமுடியாது அறி வுடையார் எவரிடமிருந்தும். ஒரு பெரிய அண்ணலின் அறிவுரை பார்ப்பன மாணவர்கள் சிலருக்குக் கல்லூரி களில் இடங்கிடைக்கவில்லை என்பதற்காக, அதை அநீதியாக அக்ரஹார தேசியத் தம்பட் டங்களான இந்து, மித்திரன்,எக்ஸ்பிரஸ், தின மணி போனறவற்றில் விளம்பரப் படுத்திக் கொண்டு, 1947-ல் உலக உத்தமர் காந்தியாரிடத் ல் தூதுபோயினர். அன்றொரு நாள் தேவர்கள் முறையிட, மஹாவிஷ்ணு' அவதாரமெடுப்பதாகக் கூறினாராமே, அதுபோல 'மஹாத்மா' தேவர் களின் சார்பிலே புறப்பட்டுவிடுவார் என்று எண் ணினர் போலும். ஆனால் அவரோ அறிவுரை கூறினார், அன் பான மொழியில். அது, இது: "பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியின் நான்கு மதில்களுக்குள் மட்டுமே, அறிவு' அடைக்கப்பட் டிருக்கவில்லை. அவைகளுக்கு வெளியில் இருந்த படியே ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் அறி வைப் பெறலாம்........ கடவுளைக்காண்பதுதான் பிராமணன் தர்மம் அவ்விதம் காணச்செய்தல் மற்றவர்களையும் வேண்டும்.?