பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுக்கமுடியாத சான்றுகள் 175 'கல்லூரியில் இடம்பிடிக்கவும் அதன் மூலம் ஆதிக்கம் செலுத்தவும் முயலாதே; 'பிராமணன்' என்று சொல்லிக்கொள்ளும்வரை கடவுளைத் தேடுவதுதான் உனக்குரிய வேலை' என்ற கருத் தினை உள்ளடக்கியே அவருக்கு இயல்பான புண் படுத்தாத புனிதமொழியிலே (அறிவுரை) கூறியுள் ளார். இதற்கு ஆதாரம் தேவையானால், 1927-ல் அவரே கூறியுள்ள எச்சரிக்கையையும் காணுங் கள். "பணத்திற்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்படு வீர்களால், உண்மைப் படிப்பற்றவர்களாயும் உண்மை மதத்தைப் போதிக்க முடியாதவர்க ளாயும் இருப்பீர்கள் அப்படி இருப்பீர்களானால், நாங்கள் உங்களைப் பிராமணர்கள்' என்றழைக்க மாட்டோம் (பார்ப்பனர் என ஒப்பமாட்டோம்.)" இப்பொழுதேனும், எல்லாக் கல்லூரிகளையும் தமக்கு மட்டுமே திறந்துவைக்க வேண்டும் என்று ஆதிக்க ஆசை கொண்டுள்ளவர்கள், உத்தமரின் உபதேசத்தினை உணர்ந்து, உண்மையாக நடந்து கொள்ள முன்வரவேண்டும். "எப்படி முடியும்? இப்படிப்பட்ட உபதேசத்தின் பலன் தானே 'கோட்சே' தோன்றியது?" என்றுகேட்கத்துணிய மாட்டார்கள், புத்தியுள்ள பார்ப்பனர் எவரும். விவேகானந்தரின் விவேக விளக்கம் பார்ப்பனர்கள் நல்லறிவு பெறும் பொருட்டு ஞானி விவேகாநந்தர், "வேதாந்தப்பணி' என்ற தலைப்பில் கும்பகோணத்தில் (பல ஆண்டுகளுக்கு முன்) ஆற்றிய சொற்பொழிவின் இவைகள்:- பகுதிகளே பாமர "நம் நாட்டுப் பெரும்பான்மையான மக்கள், செயலற்று மரத்துப்போகும்வரை, நமது