பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வகுப்புரிமைப் போராட்டம் மூதாதைகள் (பார்ப்பனர்கள்) அவர்களைத் (பாமர மக்களைத்) தங்கள் காலடியில் போட்டுத் தேய்த்துத் துவைத்து வந்துள்ளனர் இந்தச் சித்திரவதைகளால் அவர்கள் சீரழிந்தனர். அந்த அப்பாவி மக்கள் தாங்களும் மனிதர்கள்தான் என்பதையே மறந்தனர். பல நூற்றாண்டுகளாக, அவர்கள் வெறும் மரம் வெட்டிகளாகவும் ஏர் பிடிப்பவர்களாகவும் வலுக்கட்டாயத்தால் ஆக்கப் பட்டுவிட்டனர். இதனால் அவர்கள் கொத்தடிமை குலவடிமைகளாகப் பிறப்பிலேயே ஆக்கப்பட்டு விட்டதாக நம்பும்படியும் செய்யப்பட்டுவிட்டனர்." "நவீனப் படிப்பறிவிலே நாம் வல்லுனரென எவ்வளவுதான் பெருமை பேசிக்கொண்டாலும், அந்த ஏழை மக்களுக்காக யாராவது ஒரு ஆதரவு மொழி பேசிவிட்டாலும் போதும், உடனே நமது மக்கள் அந்த ஏழை அடிமைகளைக் கை தூக்கி விடும் பணியிலிருந்தும் ஓடி ஒளிந்துகொள்வர். அத்துடன், வெறிபிடித்த, முரட்டுத்தனமான விவாத முழக்கங்களைக் கிளப்புவார்கள். பரம் பரை, வம்சாவளி, பிறவிமுறை புராணங்களை அளக்கத் தொடங்கிவிடுவார்கள்.' 3.9 "மேனாடுகளிலும் இம்மாதிரி வேற்றுமைகள் இருக்கத்தானே செய்கின்றன என்று குதர்க்கம் பேசுவர், அடுத்து அந்த ஏழை மக்களை முன்னை விட அதிகக் கொடுமைப் படுத்தவும். வாதைக் குள்ளாக்கவும் துவங்கிவிடுவார்கள்." "ஆம்! பார்ப்பனர்கள்தாம். ஏ! பிராமணர் களே! உங்கள் பரம்பரை பெருமை குறித்து நான் என்ன நினைப்பது?" 'பரம்பரை உரிமை என்ற காரணத்தால், படிப்பதற்குப் பறையரைவிட அதிக தகுதியும் திற மையும் பெற்றவர்களானால், இனி, பிராமணர்க