பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுக்க முடியாத சான்றுகள் 177 ளின் படிப்பிற்காக ஒற்றைக் காசும் செலவழிக் கப்படவேண்டாம். எல்லாப் பணத்தையும், பறை யர்களின் படிப்புக்காகவே செலவு செய்யுங் கள். வலிமை வலிமை யற்றவர்களுக்கே கொடுத்துதவுங் கள். நன்கொடைகள் யாவும் தேவைப்படுவது அவர்களுக்குத்தான்." “பிராமணர்கள், பிறப்பிலேயே அறிவுத் திறமை பெற்றிருந்தால், பிறர் உதவியின்றியே அவர்கள் படித்துக்கொள்ள முடியும்." "மற்றவர்கள்,பிறவியிலேயே அறிவுத்திறமை யற்றவர்களானால், அவர்களுக்குத் தேவையான அளவு படிப்பு வசதிகளையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கூடங்களையும் அவர்களுக்கே விட்டுவிடுங் கள். நானறிந்த அளவில், இதுவே நீதியும் நியா யமும், பகுத்தறிவுப் பண்புமாகும்." [இந்த அறிவுரை - அறிஞர் ரோமெய்ன் ரோலந்து என் பார் எழுதிய, " விவேகாநந்தரின் வாழ்க்கையும் அறிவுரை களும்" என்னும் நூலில் இரண்டாம் தொகுதி பக்கம 123-ல் காணப்படுவதாகும்.] விவேகியின் விளக்கவுரையைக் கேட்ட பின் பும், தம் வகுப்பு ஒன்றே கல்விநலம் யாவும் பெற் றுக் கொழுக்கச் சில வீணர்கள் திட்டமிட்டபடி இருப்பது வெட்கக் கேடேயாகும். இனியும் "கல் லூரியில் பார்ப்பனருக்கு இடம் இல்லையா" என்று கேட்கும் எவர்தான், நேர்மையில் பற்றும், நியாய புத்தியும் கொண்டவர் என்று கருத முடியும்? அதுமட்டுமன்றி அதே ஞானியின் பெயரா லேயே பார்ப்பனரல்லாத பணப் பெட்டியாளர் களின் நன்கொடையைக் கொண்டு, கல்லூரி அமைத்து, பார்ப்பனப் பிள்ளைகளை மட்டுமே (தட் டுக் கெட்ட ஒன்றிரண்டு பா. அல்லாத பிள்ளைகளை 12