மறுக்க முடியாத சான்றுகள் 66 ஆதிக்க வெறி" என்றல்லாமல் அழைப்பது?
179 வேறெப்படி மராமத்து இலாக்கா நிலை அதுபோன்றே, 1950 மே மாதத்தில், மரா மத்து இலாக்காவுக்காக விளம்பரப்படுத்தப்பட்ட 500 சூபர்வைசர் வேலைகட்கும் ஒரு பார்ப்பனரை யும் எடுக்கவில்லை என்று ஸ்ரீமான் தென்னேட்டி விசுவநாதம் என்ற பார்ப்பனர், 'இந்து' முதலிய தம் வர்க்க ஏடுகளில் தீட்டிய கண்டனக் கடிதங் களுக்குச் சென்னை சர்க்கார் அளித்த பதிலறிக்கை இதுவாகும். "சர்க்கார் இதுபற்றி நன்கு ஆராய்ந்தது. விதிக்கு விரோதமாக ஒன்றும் முடிவு செய்யப்பட வில்லை. 1927-ல் இருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஒரு குறிப் பிட்ட சதவிகித இடங்கள் ஒவ்வொரு வகுப்பாருக் கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வகுப்புக்களில் பார்ப்பனரும் ஒரு பகுதியினர். குறிப்பிட்ட வகுப் புக்களிலிருந்து ஆட்கள்கிடைக்காவிட்டால் அடுத்த படியுள்ள வகுப்புக்களிலிருந்து இதுவரை ஆட்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதுபோன்று, ஒரு தடவை தனக்குரிய இடங்களை*M இழக்கும் வகுப்புக்கு அதைத் தொடர்ந்து ஆட்கள் எடுக்கும்போது முன் பிழந்த இடங்களைச் சரிக்கட்டும் வகையில் இடங் கள் தரப்பட்டுவந்தன. 1947--ல் தேவைப்பட்ட சூபர்வைசர்கள் 300-பேர். இதில் ஒரு இடங்கூட முறைப்படி பார்ப் பன வகுப்புக்கு உரியதல்ல. ஆனால், எடுக்கப்பட்ட 271-பேரில் 134-பேர் பார்ப்பனர்.