பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வகுப்புரிமைப் போராட்டம் யோகம் பெற விரும்பி முன்வந்தபோது பெற முடியாத நிலை ஏற்பட்டது. ஆதிக்கவாதிகள்- தமது இனத்தவரைத் தவிர மற்றவர்கள் நுழைய டம் தர மறுத்தனர். அதுமட்டுமன்றி, அரசாங் கத்தின் மூலம் நடைபெற வேண்டிய எந்தக்காரிய மானாலும், ஆதிக்கவாதிகளின் தயவைப் பெற்றால் தான் முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை யில், அரசாங்கச் சக்கரம் ஆதிக்கவாதிகளின் பிடி யில் சிக்கியதால், பார்ப்பனரல்லாதார் நிலை பரி தாபத்திற்கு ஆளாயிற்று. பார்ப்பனரல்லாதார் எனின், பார்ப்பன ரல்லாத இந்துக்கள் மட்டுமல்ல, ஆதித்திராவிடர், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் உட்பட அனைவரும், அரசாங்கத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த வகுப் பாராகிய பார்ப்பனருக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியவர்களானார்கள். திண்ணையிலே படுத் திருந்த பிச்சைக்காரன், நடு நிசியிலே வீட்டில் நுழைந்த கள்ளனோடு சேர்ந்து வீட்டுக்காரனைத் தாக்குவது போலாயிற்று நிலைமை. நிலை இந்து மதத்தின் மூலம் வருணாசிரம தர்மத்தை நாட்டி, முதலிலேயே பார்ப்பனரல்லாத இந்துக்களையும், ஆதித்திராவிடர்களையும், சமூக அடிமைகளாய் ஆட்டிப்படைத்துவந்த பார்ப்பனர், இப்பொழுதோ,மற்ற மதத்தவர்களையும் அடக்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றனர். தமது இனப் பற்று காரணமாக, அந்த வாய்ப்பைக் கொண்டு, தமது ஆதிக்கம், காலவேகத்தால் கூடச் முடியாதபடி வளர்த்துக் கொண்டனர். சரிய ஆளுகிறவர்கள், ஆங்கிலேயர் தானா? ஆதிக்க வகுப்பாரா? என்ற ஐயம் பிறக்கும் அளவுக்கு ஆதிக்கம் பெற்றிருந்தனர்.