வகுப்பு நீதி வளர்ந்த விதம் 15 அதுமட்டுமன்றி, உத்தியோக மண்டலத்தின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள கல்வித் துறையையும், தாமே கைப்பற்றிக் கொண்டனர். தங்கள் முன்னாள் மதக்கொள்கைப் படியே தங்க ளுக்கு மட்டுமே கல்விகற்கும் உரிமை உண்டென் றும், மற்றவர்கள் கற்பதே பாபம் என்றும் கூறி வந்தோர் புதிய முறையிலும், கல்வித்துறையில் மற்றவர்கட்கு இடமின்றி 'கவனித்துக்' கொள்ளத் தவறவில்லை. அதன் விளைவாக உத்தியோக மண்டலத்தில் நுழையும் தகுதியை அளிக்கும் கல்வி யைப் பெறும் வாய்ப்புங் கூடப் பிற்பட்ட வகுப்பி னர்கட்கு மிகவும் குறைந்து போயிற்று. வேலை" "பார்ப்பனர்களுக்கே புரோகித என்ற திட்டம் சமூகத் துறையில் அமைந்தது போலவே, "பார்ப்பனர்கட்கே உத்தியோக மண் டலம், மற்றவர்கட்கு அங்குவேலை இல்லை, இடமில்லை, தகுதி பெறவும் வாய்ப்பில்லை" என்ற துக்ககர மான நிலை அரசியல் துறையில் ஏற்பட்டது. தமிழகத்தார் -தென்னாட்டார், பிற்படுத்தப்பட்ட மக்களாயினர்" ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோர், புலிவேஷம் போடுகின்றார்,- எலியாக முயலாக இருக்கின்றோம் நாம்"- என்று நல்லறிவாளர் எண்ணி ஏக்கமுறும் நிலை பிறந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. விடி வெள்ளி தோற்றம் இத்தகு இருள் சூழ்ந்த நிலை நிலவிய போது தான், ஒரே வகுப்பு ஆதிக்கத்தால் விளையும் அநீதி இருள் நீங்கத்தான் போகிறது என்ற் நம்பிக்கை யைப் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய மனத்திலே தோற்றுவித்த விடிவெள்ளி தென்னாட்டு அரசி யல் வானில் தோன்றிற்று.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
