பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வகுப்புரிமைப் போராட்டம் பார்ப்பனரல்லாத மக்களில் அறிவுடையவராக வும், செல்வமுடையவராகவும் விளங்கிய ஒருசிலர், அரசியல் இயக்கத்திலே இடம் பெற்றிருந்தாலும், அரசாங்க அலுவலில் அமர்ந்திருந்தாலும், பார்ப் பனர்களின் இனப்பற்றினையும், ஆதிக்க வெறியி னையும் கண்டுணர நேர்ந்தபோது, தாமும் இன வுணர்ச்சியோடு, தம் மக்களை உயர்த்தப் பாடுபட வேண்டுமென்ற கருத்துக் கொண்டனர். எனினும், மலையளவு முயற்சி தேவைப்படு மிடத்தில் கடுகள வாகவே அது அமைந்தது. உணர நூற்றுக்கு நூறு பார்ப்பனரல்லாத இந்துக்க ளும், பார்ப்பனர்க ளிடத்தில் பக்திப் பூர்வமான சமூக அடிமைகளாக இருந்த அக்காலத்தில், தாங் கள் மேலும், மேலும் தாழ்வதையும் ஆதிக்கவாதி கள் அதிவேகமாக உயருவதையும் கூட முடியாத அளவு, மௌடீகம் அவர்கள் கண்களை மூடியிருந்த தெனில் - அவர்களிடத்தில் இன வுணர்ச்சி எப்படி இயல்பாகத் தோன்ற முடியும்? இனஉணர்ச்சி கொள்ளாமல்-இழிநிலை அடைந்த அவர்கள் உயரும் வழி எது ? இன உணர்ச்சி - இந்நிலையில்தான், தனிப்பட்ட பார்ப்பன ரல்லாதாரின் முயற்சி விரும்பிய பயன் அளிக் காது என்பதையும், மக்களிடத்தில் விழிப்புணர் வும், இனப்பற்றும் ஏற்பட்டாலொழிய சமூக அர சியல் சமத்துவம் கிட்டாது என்பதையும், அதற் காகப் பணிபுரிய ஒரு கூட்டம், அமைப்பு, கட்சி, தேவை யென்பதையும் கண்டறிந்த-திராவிடத் தந்தை, டாக்டர் சி. நடேசமுதலியார் அவர்களும், திராவிடச் செம்மல், சர். பி. தியாகராயச் செட்டி யார் அவர்களும், திராவிடப் பேரறிஞர். டாக்டர் டி.எம். நாயர் அவர்களும் - ஒன்று கூடியே-