பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு நீதி வளர்ந்த விதம் 17 மக்களின் பார்ப்பன ரல்லாதார் பலருடைய ஒத்துழைப்பை யும் திரட்டிப் பிற்படுத்தப்பட்ட நலனைப் பாதுகாக்க முன் வந்தனர். முதல் முரசு! முதன் முதலாகச் "சென்னை, திராவிடர் கழகம்' (Madras Dravidian Association) கண்டு, அதன்மூலம் இன உணர்ச்சியை விதைக்க முன் வந்த பெருமையும், சென்னை நகராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பல்லாண்டுகளாகவே புகழு டன் விளங்கிவந்த பெருமை வாய்ந்த சர். பி. தியாகராயரையும், டாக்டர். டிஎம்.நாயரையும் நகராட்சிமன்ற நடவடிக்கைகளில் கருத்து மாறு பாடுடையவர்களாக இருந்தபோதிலும், பிற்படுத் தப்பட்ட மக்களின் நலத்தினைக் காக்க ஒரே மேடையில் கூடிநின்று பணியாற்றச் செய்த பெருமையும்,டாக்டர். நடேச முதலியார் அவர் களையே சாரும். அதன் விளைவாகவே, பார்ப்பனரல்லாதார் நலத்தைக் கருத்தில் கொண்டு, 1916-ம் ஆண்டில், தியாகராயரும், நாயரும் முன்னின்று "தென் இந்தியர் நலவுரிமைச் சங்கத்தைத்' (South Indian Liberal Federation.) தோற்று வித்தனர். தியாகராயரின் முதல் அறிக்கையும் வெளிவந் தது.சென்னைமாநிலத்தில், திராவிடர்பெற்றிருந்த தாழ்நிலையை விளக்கி, சமூகநீதியை நிலைநாட்ட, ஒரே வகுப்பாரின் ஆதிக்கத்தைத் தடுத்தாக வேண்டுமென அவ்வறிக்கை முரசு கொட்டிற்று. அன்றிருந்த நிலை 1915-ம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் இருந்த நிலையை அறிந்தவர் கள்தான், பார்ப்பனரல்லாதாரின் சமூகநீதி இயக் 2